கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த 3 இஸ்லாமியர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினர். அண்மையில் அவர்களை கண்டுபிடித்து பெருந்துறை அரசு மருத்துவமனையில் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, அவர்கள் வசித்த இடத்தைச் சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் உள்ள மாரியம்மன் கோயில் வீதி, பெரியப்பள்ளி வாசல் வீதி, சின்ன வெங்கடாசலம் பிள்ளை வீதி, பாக்கியலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளைத் தனிமைப்படுத்தியுள்ளனர். பின்னர், அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல், இருமல் அறிகுறி போன்றவை உள்ளதா என்றும் சுகாதாரப் பணியாளர்கள் பரிசோதனை செய்துவருகின்றனர்.
சமூகப் பரவலைத் தடுக்கும் நோக்கில், வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரப் பணியாளர்கள் 16 வீதிகளின் நுழைவு வாயிலை சீல் வைத்ததோடு, தடுப்புகளை வைத்தும் மூடியுள்ளனர்.
இதையும் படிங்க...மின் சாதனங்கள் வெடிக்கும் என்ற பயம் வேண்டாம் - அமைச்சர் தங்கமணி!