ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் உள்ள வாரச்சந்தையில், வாரந்தோறும் புதன், வியாழன் ஆகிய இரண்டு நாள்களில் கால்நடை சந்தை நடைபெறுவது வழக்கம். புகழ்பெற்ற இந்த கால்நடை சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் தங்களது ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருதல், வாங்கி செல்தல் என கோடிக்கணக்கில் வியாபாரம் நடைபெறும் முக்கிய சந்தையாக உள்ளது.
இந்நிலையில் தற்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மாநில எல்லையில் உள்ள பகுதிகளிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும், மக்கள் கூட வேண்டாமென தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
இதைத்தொடர்ந்து மார்ச் 31ஆம் தேதி வரை புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், காய்கறி, மளிகை சாமான் விற்பனை நடைபெறும் சந்தைகளுக்கு தடையில்லை என்றும் அறிவித்துள்ளது. இதனால் கால்நடை விற்பனையாளர்கள், வியாபாரிகள் என பலர் பாதிப்படவைவார்கள் என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சத்துணவு முட்டைகளை வெளி மார்க்கெட்டில் விற்றால் கடும் நடவடிக்கை!