ETV Bharat / state

ஆன்லைன் மூலம் கடன் வாங்கித் தருவதாக மோசடி செய்தவர் மீது புகார் - crime news

ஆன்லைன் மூலம் தங்கள் பெயரில் கடன் பெற்று மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்டோர் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஆன்லைன் கடன்
ஆன்லைன் கடன்
author img

By

Published : Jun 29, 2021, 8:35 AM IST

ஈரோடு: சத்தியமங்கலம் ராஜீவ்நகரைச் சேர்ந்தவர் முபாரக் அலி. இவர் ஆன்லைன் மூலம் கடன் பெற்றுத் தருவதாக விளம்பரம் செய்திருந்தார். அதன்படி வாணிப்புத்தூரைச் சேர்ந்த மயில்சாமி உள்ளிட்ட 10 பேர் முபாரக் அலியைச் சந்தித்து கடன் பெற்றுத் தருமாறு கேட்டனர்.

இதையடுத்து அவர்களிடமிருந்து ஆதார், செல்போன் எண், வருமானவரி கணக்கு எண் உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு கடன் பெற்றுத் தருவதாகக் கூறினார். அதன்படி சில நாள்களில் 50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்குவதற்கு ஏடிஎம் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவை அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டன.

இதையறிந்த முபாரக் அலி, மீண்டும் தன்னால் மட்டுமே பணத்தைப் பெற முடியும் எனக்கூறி ஏடிஎம் அட்டையைக் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.

பின்னர் கடன் பெற்றவர்களுக்குத் தெரியாமல், சுமார் ஐந்து லட்சம் ரூபாய்வரை ஏடிஎம் அட்டையை வைத்து பணத்தைத் திருடியிருக்கிறார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்டோர், தங்கள் பெயரில் கடன்பெற்று பணத்தை மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகாரளித்துள்ளனர்.

இதையும் படிங்க: தொழிலதிபரைக் கடத்தி சொத்துகள் அபகரிப்பு: 10 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.