ETV Bharat / state

‘தைப்பூச விழாவுக்கு பொதுவிடுமுறை குறித்து முதலமைச்சர் முடிவெடிப்பார்’ - அமைச்சர் செங்கோட்டையன் - தமிழ்நாடு முதலமைச்சார்

ஈரோடு: வரும் காலங்களில் தைப்பூச விழாவிற்கு பொது விடுமுறை அளிப்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர்  முடிவெடுத்து அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

chief-minister-decides-on-public-holiday-for-taipoosa-ceremony
chief-minister-decides-on-public-holiday-for-taipoosa-ceremony
author img

By

Published : Feb 8, 2020, 11:58 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற பச்சமலை பாலமுருகன் கோயில், பவளமலை தண்டாயுதபாணி சுவாமி கோயில் என இரு முருகன் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் பங்குனி உத்தரம், சஷ்டி விழா, தைப்பூச விழாக்கள் வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டுவருகிறது.

இந்நிலையில் இன்று தைப்பூச விழாவையொட்டி இரு கோயில்களிலும் விழா பூஜைகள், அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்றது. மேலும் மாலை தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனடிப்படையில் பச்சமலை பாலமுருகன் கோயிலில் நடைபெற்ற தைப்பூச விழாவில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பங்கேற்றார்.

அமைச்சருக்கு கோயில் அச்சகர்கள் சார்பில் பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பச்சமலை அடிவாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழாவை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கிவைத்து, பக்தர்களுக்கு உணவு பரிமாறினார்.

தைப்பூச விழாவுக்கு பொதுவிடுமுறை குறித்து முதலமைச்சர் முடிவெடிப்பார்

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “ஆன்மீகத்தை பொருத்தவரையிலும் எம்மதமும் சம்மதம், என்ற அடிப்படையில் திராவிட கட்சிகள் கடைபிடித்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக தைப்பூச விழாவில் இன்று பக்தர்களுக்கு அன்னதானம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தைப்பூச விழாவிற்கு பொதுவிடுமுறை அளிப்பது குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுப்பார். அதற்குறிய கோப்புகள் அவரிடம் வழங்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 180 டன் எடை: ஒரே கல்லால் ஆன முருகன் சிலை

Intro:Body:tn_erd_01_sathy_kas_minister_vis_tn10009

தைப்பூச விழாவுக்கு பொதுவிடுமுறை குறித்து முதல்வர் முடிவெடிப்பார்: அமைச்சர் செங்கோட்டையன்

கோபிசெட்டிபாளையத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பச்சமலை பாலமுருகன் கோயிலில் நடைபெறும் தைபூசவிழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்தறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்த பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது வரும் காலங்களில் தைபூச விழாவிற்கு பொது விடுமுறை அளிப்பது குறித்து முதல்வர் முடிவெடுத்து அறிப்பார் என தெரிவித்தார்

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பிரசிசித்தி பெற்ற பச்சமலை பாலமுருகன் கோயில் மற்றும் பவளமலை தண்டாயுதபாணி சுவாமி கோயில் என இரு முருகன் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் பங்குனி உத்தரம் சஷ்டி விழா மற்றும் தைபூச விழாக்கள் வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில் இன்று தைபூச விழாவையொட்டி இரு கோயில்களிலும் விழா பூஜைகள் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மேலும் மாலை தேரோட்;டம் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. அதன் அடிப்படையில் பச்சமலை பாலமுருகன் கோயிலில் நடைபெற்ற தைபூச விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்றார். அமைச்சருக்கு கோயில் அச்சகர்கள் சார்பில் பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பச்சமலை அடிவாரத்தில் தைபூச அன்னதான குழுவின் சார்பில் நடைபெறும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழாவை அமைச்சர் செங்கோட்டையன் பக்தர்களுக்கு உணவு பறிமாறி தொடங்கிவைத்து அவரும் மற்ற அரசு அதிகாரிகளும் பக்தர்களுடன் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆன்மீகத்தை பொருத்தவரையிலும் எம்மதமும் சம்மதம் என்ற அடிப்படையில் திராவிட கழகம் கடைபிடிக்கப்ட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக தைபூச விழாவில் இன்று பக்தர்களுக்கு அன்னதானம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள். தைப்பூச திருநாளில் அனைவருக்கும் எல்லா வளமும் கிடைக்கவேண்டும். தைப்பூச விழாவிற்கு பொதுவிடுமுறை அளிப்பது குறித்து முதல்வர்தான் முடிவெடுப்பார். அதற்குறிய கோப்புகள் அவரிடம் வழங்கப்பட்டுள்ளது. உரிய ஆய்வு செய்து முடிவை முதல்வர் அறிவிப்பார் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இவ்விழாவில் அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்

பேட்டி:
திரு.கே.ஏ.செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.