உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி, தங்களது 9 வயது சிறுமியுடன் ஊட்டிக்கு 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சுற்றுலா வந்தனர். சென்னையிலிருந்து ரயிலில் அவர்கள் வந்தபோது, அதே பெட்டியில் திருப்பூர் மாவட்டம் ஊதியூர் காவல் நிலைய தலைமைக் காவலர் ஜெகன் (39) என்பவரும் பயணித்தார்.
அப்போது ஈரோட்டில் வைத்து, சிறுமிக்கு காவலர் ஜெகன் பாலியல் தொல்லை கொடுத்தார். சிறுமி சத்தம் போடவே பெற்றோர்களுக்கு காவலர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து ஈரோடு ரயில்வே காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.
இதையடுத்து போக்சோ சட்டத்தில் காவலர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு ஈரோடு மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி, குற்றஞ்சாட்டப்பட்ட காவலர் ஜெகனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
மேலும் அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக 3 மாத தண்டனை அனுபவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.50 ஆயிரம் அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - வியாபாரி கைது