ETV Bharat / state

`ஸ்டெர்லைட் ஆலை திறக்க மத்திய அரசு மறைமுகமாக தூண்டுகிறது`திருப்பூர் எம்பி சுப்பராயன்!

ஈரோடு: தடை செய்யப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை பிராணவாயு தயாரிக்க திறப்பதற்கு மத்திய அரசின் தூண்டுதலின் பேரில் தான் வேதாந்தா நிறுவனம் அனுமதி கோரியுள்ளதாக, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்புராயன் தெரிவித்துள்ளார்.

Central Government is indirectly prompting the opening of the Sterlite

author img

By

Published : Apr 24, 2021, 9:11 PM IST

ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்புராயன், "இந்தியாவில் இதுவரையிலும் கேட்டறியாத வகையில் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 2 லட்சத்து 95 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 25 பேர்கள் உரியிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் பிராணவாயு பற்றாக்குறை, மருந்து பற்றாக்குறை, படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

திடீரென இரண்டாவது அலை தொடங்கி விடவில்லை. கடந்தாண்டு ஜனவரியில் உலக சுகாதார நிறுவனம் நோய் தொற்று தீவிரம் அடையும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மோடி அரசு அந்த எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல் திருவிழாக்களை நடத்தியது.

டிரம்பை அழைத்து விழா நடத்தியதால் தான் தொற்று அதிகளவு பரவியுள்ளது. வெளிநாடு பயணிகளை பரிசோதனை செய்தததால் தான் பரவல் அதிகரித்துள்ளது. முன்தடுப்பு எடுக்காததினால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் ஏற்படும் மரணங்கள் திட்டமிட்டே மறைக்கப்படுகிறது.

கரோனா தொற்று அதிகரித்து சூழ்நிலையில், 23 பிரணவாயு தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளனர். பொறுப்புள்ள பதவியில் பொறுப்பற்ற மோடி உள்ளதால்தான், இந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நெருக்கடிக்கு முதன்முதல் காரணம் மோடி அரசு தான். பிரதமர் பதவிக்கான தார்மீக கடமையை இழந்துவிட்டனர். இந்தியா முழுவதும் தடுப்பு மருந்து பற்றாக்குறை அதிகளவு ஏற்பட்டுள்ளது.

6 கோடி தடுப்பு மருந்து 80 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. சொந்த நாட்டில் மக்கள் செத்து மடிக்கின்றனர். மோடி அரசு ஏற்றுமதிக்குத் தடை விதித்திருந்தால் இந்தியாவில் மருந்து பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது.

கேரளா மாநிலம், 50 லட்சம் கேட்டதற்கு ஒன்னரை லட்சம் மட்டும் அனுப்பியுள்ளது. சீன நிறுவனத்தின் தடுப்பூசி 150க்கு விற்பனை செய்தாலே நல்ல லாபம் இருப்பதாக அந்த நிறுவனமே சொல்லியுள்ளது.

ஆனால் மக்களுக்கு 400 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். தனியார் நிறுவனத்திற்கு வரம்பற்ற அனுமதியை வழங்கி, மோடி அரசு வரம்பற்ற செயலை மேற்கொள்கிறது. மருந்து பற்றாக்குறை இல்லை என்று மத்திய, மாநில அரசுகள் பித்தலாட்டமாகப் பொய் பேசுகின்றனர்.

மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். தமிழ்நாட்டில் உள்ள தடுப்பூசி தயாரிப்பு ஆலைகளை திறக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இலவச தடுப்பூசி என்று அறிவிப்பு மட்டுமே உள்ளது.

பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் தடுப்பு மருந்து உற்பத்தி செய்வதை போர் கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். மூடப்பட்ட தடைசெய்யப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை பிராணவாயு தயாரிக்க திறப்பதற்கு மத்திய அரசின் தூண்டுதலின் தான் வேதாந்தா நிறுவனம் அனுமதி கோரியுள்ளனர்.

தடை செய்யப்பட்டுள்ள அனைத்து சொத்துக்களையும் நாட்டுடைமை ஆக்க வேண்டும். ஆலையை திறக்க நீதிமன்றம் அனுமதி அளிக்குமேனால் அது குற்ற நடவடிக்கையாகும். அதற்கு முன்னால் அந்த ஆலையை நாட்டுடைமை ஆக்க வேண்டும்.

கரோனா உயிரிழப்பு குறித்து உண்மையான அறிக்கை வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளோம்" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.