சட்டப்பேரவை தேர்தலில், கடந்த 12ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அனைத்துக் கட்சி வேட்பாளர்களும், வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, சிபிஐ, நாம் தமிழர், அமமுக, மநீம உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. வேட்பாளர்கள் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில், தேர்தல் நடத்தும் அலுவலர் உமாசங்கர் வேட்புமனு பெறுவதற்காக தினந்தோறும் காத்திருக்கிறார். ஆனால், ஈரோடு மாவட்டத்தில் அனைத்து தொகுதியிலும் வேட்புமனு தாக்கல்செய்யப்பட்டுள்ள நிலையில், பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 5 நாள்களில் போட்டியிட ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச்19 கடைசியாக உள்ள நிலையில் இன்று (மார்ச்17) அல்லது நாளை (மார்ச் 18) பிரதான கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: காஞ்சிபுரம் அருகே ரூ.4.90 லட்சம் மதிப்புள்ள பட்டு புடவைகள் பறிமுதல்!