ETV Bharat / state

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பசு படுகாயம்

ஈரோடு: நாட்டு வெடிகுண்டு வெடித்ததில், பசு முகத்தில் தாடை சிதறியது. இதுகுறித்து வனத் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பசுமாடு படுகாயம்

author img

By

Published : Apr 20, 2020, 6:53 PM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த புளியம்கோம்பை பகுதியைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவரது தோட்டம் வனத்தை ஒட்டியுள்ள பகுதியில் அமைந்துள்ளது. அங்கு ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். இன்று காலை வழக்கம்போல ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பசு படுகாயம்

பின்னர் தொடர்ந்து விவசாயப் பணிகளை கவனித்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். சம்பவ இடத்தை சென்று பார்த்தபோது, அங்கு நாட்டு வெடிகுண்டு வெடித்ததில், அதன் காகித துகள்கள் அவரது பசு முகத்தில் பட்டு, தாடை சிதறி கிடந்தது தெரிய வந்தது.

இதையடுத்து தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தனர். மேலும் காட்டுப்பன்றியை வேட்டையாட நாட்டு வெடிகுண்டு வைக்கப்பட்டு, அவ்வழியாக மேய்ந்து கொண்டிருந்த பசு நாட்டு வெடிகுண்டை கடித்து வெடித்ததில், இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில் படுகாயமடைந்த பசு, கடந்த ஏழு நாட்களுக்கு முன்பு ஒரு கன்றுக்குட்டியை ஈன்றுள்ளது.

தினமும் 15 லிட்டர் பால் கறக்கும் இப்பசுவின் மதிப்பு ரூபாய் 70 ஆயிரம் எனக் கணக்கிடப்படுகிறது. நாட்டு வெடிகுண்டு வைத்தது யார் என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: திருநங்கையின் கரோனா விழிப்புணர்வுப் பாடல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.