ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரம் பவானி ரோட்டைச் சேர்ந்த சேகரின் மகன் கோகுல். இவர் தனது இருசக்கர வாகனத்தை நேற்று முன்தினம் (ஆக. 25) இரவு அந்தப் பகுதியில் உள்ள பெட்ரோல் சேமிப்பு நிலையத்தின் அருகில் நிறுத்தி வைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றார்.
இந்நிலையில் நேற்று(ஆக.26) அதிகாலை 5 மணியளவில் இளைஞர் ஒருவர் அந்த மோட்டார் இருசக்கர வாகனத்தை திருடுவதற்காக தள்ளிக்கொண்டு சென்றார். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள், அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து, ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காவல் துறையினர் விசாரணை செய்ததில் அந்த இளைஞர், சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா, பூசாரிபட்டி ராஜவீதியைச் சேர்ந்த சீனிவாசனின் மகன் சூர்யா என்கிற சரத்சூர்யா என்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா செல்பேசி