ETV Bharat / state

மூக்கை பொத்தியபடி ஆய்வு செய்த பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி!

பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் துர்நாற்றத்துடன் கருப்பு நிறத்தில் வெளியேறும் தண்ணீரை, மூக்கை பொத்தியபடி அத்தொகுதி எம்எல்ஏ பண்ணாரி ஆய்வு செய்தார்.

மூக்கை பொத்தியபடி ஆய்வு செய்த பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி

author img

By

Published : May 14, 2023, 9:52 AM IST

பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் துர்நாற்றத்துடன் கருப்பு நிறத்தில் வெளியேறும் தண்ணீரை, மூக்கை பொத்தியபடி அத்தொகுதி எம்எல்ஏ பண்ணாரி ஆய்வு செய்தார்

ஈரோடு: ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்குகிறது. இதன் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன. அதேநேரம், பல்வேறு நகரங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கிராமங்களில் வசிக்கும் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது.

இதனிடையே, கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர், கருப்பு நிறத்தில் துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இந்த ஆற்று நீரில் எண்ணெய் படலம் போல் லேசான நுரை மிதக்கிறது.

அது மட்டுமல்லாமல், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், பவானி ஆற்றில் கலந்து பவானிசாகர் அணை வழியாக தண்ணீர் கருப்பு நிறத்தில் வெளியேறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், நேற்று (மே 13) பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினரான அதிமுகவைச் சேர்ந்த பண்ணாரி, பவானிசாகர் அணை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அணையில் இருந்து பவானி ஆற்றில் மதகுகள் மூலம் தண்ணீர் வெளியேறும் பகுதியில் கருப்பு நிறத்தில் தண்ணீர் வெளியேறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, எம்எல்ஏ பண்ணாரி துர்நாற்றம் வீசுவதை அறிந்து, தன் மூக்கை கை விரல்களால் பொத்திக் கொண்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், இது குறித்து எம்எல்ஏ பண்ணாரி கூறுகையில், “பவானி ஆற்றில் இது போல தனியார் ஆலைகளின் கழிவுகள் கலப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க உடனடியாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், மக்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மாநில தூய்மைப் பணியாளர் ஆணையம் அமைக்கக் கோரி ஆளுநருக்கு கடிதம் - NCSK தலைவர் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.