ETV Bharat / state

பவானிசாகர் அணையின் நீர் இருப்பு குறைவால் விவசாயிகள் கவலை

ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர் இருப்பு வெகுவாக குறைந்துள்ளதால் திருப்பூர், கரூர் மாவட்டங்களின் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பவானிசாகர் அணை
author img

By

Published : Aug 2, 2019, 5:53 PM IST

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. அதுமட்டுமின்றி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள மக்களின் குடிநீர் தேவையையும் இந்த அணை பூர்த்தி செய்துவருகிறது.

நீர்பிடிப்பு பகுதிகளான வடகேரளா, நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழைநீர் மாயாற்றின் வழியாக இந்த அணைக்கு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து கணிசமாக உயர்ந்து 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதியன்று அணையின் நீர்மட்டம் 97.86 அடியாகவும், நீர் இருப்பு 27 டிஎம்சியாகவும் இருந்ததால் கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது.

ஆனால் இந்தாண்டு எதிர்பார்த்த அளவு பருவமழை பெய்யாததால் அணையின் நீர்வரத்து குறைவாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் நீர்வரத்தும் குறைந்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டத்தை பொறுத்தவரை, இன்றைய நிலவரப்படி 62.45 அடியாகவும், நீர் இருப்பு 8.1 டிஎம்சியாகவும், நீர் வரத்து 577 கனஅடியாகவும் உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆறு, கீழ்பவானி வாய்க்காலில் 205கனஅடி நீர் வெளியேற்றப்படும் நிலையில், போதிய நீர் இருப்பு இல்லாததால் இந்த ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Intro:Body:tn_erd_02_sathy_bhavanisagar_dam_vis_tn10009

பவானிசாகர் அணைக்கு நீர் திறப்பதில் சிக்கல்: நீர் இருப்பு குறைவாக இருப்பதால் விவசாயிகள் கவலை

கடந்த ஆண்டு இதேநாளில் பவானிசாகர் அணையில் நீர் இருப்பு 27 டிஎம்சி யாக இருந்த நிலையில் தற்போது 8 டிஎம்சி மட்டுமே நீர் இருப்பு உள்ளதால் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல்

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 இலட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு ஈரோடு மாவட்டத்தில் உள்ள மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான வடகேரளா மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழை நீர் பவானி ஆறு மற்றும் மாயாற்றின் வழியாக அணைக்கு வந்து சேருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து கணிசமாக இருந்ததால் கடந்த 2018 ம் ஆண்டு ஆகஸ்ட் 1 ம் தேதி அணையின் நீர்மட்டம் 97.86 அடியாகவும், நீர் இருப்பு 27 டிஎம்சி யாகவும் இருந்தது. இதன்காரணமாக கடந்த ஆண்டு கீழ்பவானி வாய்க்கால் பாசனப்பகுதிகளுக்கு நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் இந்த அண்டு எதிர்பார்த்த அளவு பருவமழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து குறைவாக உள்ளது. இதன்காரணமாக அணையின் நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 62.45 அடியாகவும் நீர் இருப்பு 8.1 டிஎம்சி மற்றும் நீர் வரத்து 577 கனஅடியாகவும் உள்ளது. இதன்காரணமாக இந்த ஆண்டு பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் 205 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.