ETV Bharat / state

28ஆவது முறையாக 100 அடியை எட்டிய பவானிசாகர் அணை! - It is noteworthy that the dam reached 100 feet for the 28th time in the 67 years of the dams history

ஈரோடு பவானிசாகர் அணை 28ஆவது முறையாக 100 அடியை எட்டியுள்ளது.

28 வது முறையாக 100 அடியை பவானிசாகர் அணை எட்டியது

author img

By

Published : Jul 28, 2022, 8:32 PM IST

ஈரோடு: நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சி, அப்பர் பவானி ஆகிய நீர்ப்பிடிப்புப்பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக பில்லூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. பவானி ஆறும் மாயாற்று நீரும் அணைக்கு வந்து சேருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஜூலை 5ஆம் தேதி 83 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து 100 அடியை எட்டியது. 105 அடி நீர்மட்ட உயரம் கொண்ட அணை தற்போது கடல்போல் காட்சியளிக்கிறது.

அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 149 கனஅடியாகவும் பவானி ஆற்றில் நீர் வெளியேற்றம் 105 கனஅடியாகவும் நீர் இருப்பு 28.72 டிஎம்சியாகவும் உள்ளது. ஜூலை மாத இறுதி வரை 100 அடி மட்டுமே தேக்கி வைக்க முடியும் என்ற நிலையில் தற்போது அணையின் நீர்மட்டத்தை 102 அடி வரை உயர்த்துமாறும் பின்னர் இந்த நீரை குடிநீர் மற்றும் பாசனத்துக்கு பயன்படுத்துமாறும் தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.

அணை வரலாற்றில் 67ஆவது ஆண்டில் 28ஆவது முறையாக அணை 100 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது. பவானிசாகர் அணை 100 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 47 ஆயிரம் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

28ஆவது முறையாக 100 அடியை எட்டிய பவானிசாகர் அணை!

இதையும் படிங்க:குடியரசுத் தலைவர் பற்றி சர்ச்சை பேச்சு - காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.