ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் உள்ள கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், வினோபாநகர், பெரியகொடிவேரி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப்பணிகள், குடிநீர் மேல்நிலைத்தொட்டி உள்ளிட்ட தொகுதி வளர்ச்சிப்பணிகளை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமிபூஜையுடன் தொடங்கிவைத்தார்.
அதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அப்போது அமைச்சரை வரவேற்ற பெண்கள் ஆராத்தியுடன் காத்திருத்தனர். வரிசையாக நின்று ஆரத்தி எடுத்த பெண்களுக்கு அவர்களது ஆரத்தி தட்டுகளில் அமைச்சர் செங்கோட்டையன் தலா நூறு ரூபாயை வழங்கினார். இது போன்று அமைச்சர் பணம் வழங்குவதால் செங்கோட்டையன் விழா என்றால் பெண்கள் ஆராத்தி எடுப்பது வழக்கமாகிவிட்டது. நிகழ்ச்சியில் வட்டாட்சியர் உள்ளட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க: ஆவணங்களை ஒப்படைக்க பொன். மாணிக்கவேலுக்கு அரசு உத்தரவு