ETV Bharat / state

தேர்வு முடிவுகள் வந்ததும் நீட் குறித்த சூர்யாவின் நிலைப்பாடு மாறும்: அண்ணாமலை

நீட் தேர்வு முடிவுகள் வந்ததும் நடிகர் சூர்யா தேர்வு குறித்த தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார் என தமிழ்நாடு பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tamilnadu BJP state vice-president
Annamalai Press Meet
author img

By

Published : Sep 18, 2020, 2:05 PM IST

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர்கள் எழுச்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஈரோடு வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் ராயல். கே. சரவணன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, 'கிஷான் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை, 32 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.

பாஜக, அதிமுக இடையே கூட்டணி தர்மம் ஒன்று உள்ளது. இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கொள்கையில் வேறுபாடு உள்ளதால், கூட்டணியில் உள்ளோம். ஒரே கொள்கை இருந்தால், ஒரே கட்சியாக தான் இருக்க வேண்டும்.

மும்மொழி கொள்கையைப் பொறுத்தவரையில், மத்திய மாநில அரசுகள் மொழியை தேர்வு செய்ய வேண்டியது இல்லை. அந்தந்த மாவட்ட நிர்வாகமே தேர்வு செய்யலாம். மத்திய அரசு இந்தியை கட்டாய மொழியாக அறிவிக்கவில்லை. திமுக தலைவர்கள் நடத்தும் 47 பள்ளிகளில் தான் இந்தி கட்டாயமாக திணிக்கப்பட்டுள்ளது.

மேக தாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை மதித்து மத்திய அரசு நல்ல முடிவு தரும்' என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், 'திமுக, காங்கிரஸ் கூட்டணியில் தான் நீட் தேர்வு நடத்துவது குறித்து அரசிதழில் வெளியிடப்பட்டது. நீட் தேர்வுக்கு எதிராக எந்த ஒரு மாணவரும், பெற்றோரும் சாலைக்கு வரவில்லை. அரசியல் தலைவர்கள் தான் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

இந்தாண்டு நீட் தேர்வில், 180 கேள்விகளுக்கு, 173 கேள்விகள் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. 11, 12ஆம் வகுப்பு பாடங்களில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களே இதற்கு காரணம். எதிர்ப்பாளர்களுக்கு இந்தாண்டு நீட் தேர்வு முடிவு சரியான பதில் அளிக்கும்.

நீட் தேர்வு பற்றி நடிகர் சூர்யா இன்னும் புரிந்து கொள்ள வேண்டும். தேர்வு முடிவுகள் வரும்போது அவரே புரிந்து கொண்டு தனது முடிவை மாற்றிக் கொள்வார்.

சில அரசியல் கட்சிகள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பதாக தேர்வுக்கு முந்தைய நாள் வரை தவறான அறிக்கையை வெளியிட்டு வரும் பொய் பரப்புரையால் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்ற 13 மாணவர்களின் தற்கொலை தான் கடைசியாக இருக்கும். இனிமேல் தற்கொலைகள் நிகழாது' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க : நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை - தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.