சத்தியமங்கலத்தை அடுத்த பெரும்பள்ளம் அணை நீர்த்தேக்கப்பகுதியில் வண்டல் மண் அள்ளுவதற்கு கெம்பநாயக்கன்பாளையம் விவசாயிகளுக்கு வட்டாட்சியர் 10 நாள்கள் அனுமதி அளித்துள்ளார். விவசாயிகளின் நிலங்களின் தேவைக்கேற்ப தனித்தனியாக அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது.
இதன்படி, நான்கு நாள்களுக்கு முன் ஒரு நாள் மட்டுமே வண்டல் மண் அள்ளுவதற்கு பொதுப்பணித்துறையினர் அனுமதி அளித்தனர். இந்நிலையில் நேற்று காலை அணைக்கு மண் அள்ளுவதற்கு விவசாயிகள் டிராக்டருடன் சென்றனர். இதற்கு பொதுப்பணித்துறையினர் அனுமதிக்கவில்லை.
மண்அள்ளுவதற்கு உரிய ஆவணங்கள் வைத்திருந்தும் அனுமதிக்காத பொதுப்பணித்துறை அதிகாரிகளைக் கண்டித்து கே.என். பாளையம் பேருந்து நிலைய சந்திப்பில் டிராக்டர்களை சாலையில் நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரி சுபத்ரா, சர்வே மேற்கொண்டு உரிய அனுமதி பெற்ற விவசாயிகள் மண்அள்ளுவதற்கு அனுமதி அளிக்கப்படும் என உறுதியளித்தையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிக்க: ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற உத்தரவு - கூடுதல் ஆட்சியர் ஆய்வு!