ETV Bharat / state

எதிரணியினர் எவ்வளவு கொடுத்தாலும் ஈரோட்டில் அதிமுகவுக்கு வெற்றி உறுதி: செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி

எதிரணியினர் எவ்வளவு கொடுத்தாலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி உறுதி செய்யப்பட்டது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி

author img

By

Published : Feb 1, 2023, 7:39 AM IST

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக தேர்தல் பணி குழு ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணம்பாளையம் பகுதியில் நடைபெற்றது. முன்னதாக அங்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு முறையான அனுமதி பெறவில்லை, எனக் கூறி கூட்டத்தைக் கலைக்கக் கூறினர். கலைக்கவில்லை என்றால் வழக்குப்பதிவு செய்யப்படும் என தேர்தல் பறக்கும் படையினர் எச்சரித்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்த செங்கோட்டையனிடம் அதிகாரிகளிடம் முறையான அனுமதி கடிதம் கொடுப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து, ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “மக்கள் மாற்றத்தை விரும்புவதாக தங்களிடம் தெரிவிக்கின்றனர். மக்களின் மனநிலை மாறியுள்ளது.

இந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திருப்புமுனையை ஏற்படுத்தும். மாற்றங்கள் உருவாகின்ற காலம் வெகு தொலைவில்லை. இடம்பெயர்ந்த வாக்காளர்களின் விவரங்களை சரிபார்த்து வருகிறோம். 30 ஆயிரம் பேர் வரை இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் எங்குள்ளனர் என விவரங்களை சேகரித்து வருகின்றோம்.

மாற்றுக்கட்சியினர் கருத்துகளுக்குப் பதிலளிக்க விரும்பவில்லை. வேட்பாளர் அறிவிப்பதில் எவ்வித குழப்பமில்லை. நாளை தேர்தல் பணிமனை திறக்கும் போது நல்ல பதில் கிடைக்கும். கிழக்கு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இறந்த வாக்காளர்களே 5 ஆயிரம் இருப்பார்கள். எதிரணியினர் ஆயிரம் ரூபாய் அல்ல எவ்வளவு கொடுத்தாலும் அதிமுக வெற்றி உறுதி. சரியான நேரத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தல் முடிவு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும்.

சரியான நேரத்தில் , சரியான முறையில் அதிமுக பொதுக்குழு விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம்.தாலிக்கு தங்கம் திட்டம் எங்கே? 786 கோடி ரூபாய் தாலிக்கு தங்கம் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பணத்தில், 200 கோடி ரூபாய் மட்டுமே பெண்கள் திட்டத்திற்காகச் செலவு செய்யப்படுகிறது” என குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:முதல் நாளிலேயே சுயேச்சை வேட்பாளர்கள் பல கெட்-அப்களில் வேட்பு மனு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.