ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதியில் வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் எனப் பிரதான கட்சி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்னும் சில சிறிய கட்சிகள், சுயேட்சைகள் என 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஆனால், ஈரோடு கிழக்கைப் பொறுத்தவரையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு இடையே தான் நேரடி போட்டி எனத் தொகுதி மக்கள் கூறுகின்றனர். தேர்தலைப் பொறுத்தவரையில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் தபால் வாக்குகள் செலுத்தும் பணி தொடங்கியது. ஓரிரு நாளில் பூத் சிலிப் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யும் பணியைத் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்.
இப்படித் தேர்தல் ஆணையத்தின் பணிகள் ஒருபுறம் இருக்க அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈட்டுப்பட்டுள்ளனர். ஈரோடு கிழக்கில் முகாமிட்டுள்ள திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் 'கை' சின்னத்திற்கு ஆதரவாகத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதேநேரத்தில் 4 நாள் சுற்றுப்பயணமாக ஈரோடு கிழக்கில் முகாமிட்டுள்ள அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆளும் திமுக அரசுக்கு எதிராக மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, சட்ட ஒழுங்கு பிரச்சனை, தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகிறார். அவருடன், முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், சி.வி.சண்முகம், கருப்பணன், எஸ்.பி.வேலுமணி மற்றும் கூட்டணி கட்சிகளான பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கே.எஸ்.தென்னரசுவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க ஈரோடு கிழக்கில் உள்ள வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதாக இரு கட்சியினரும் பரஸ்பரம் தேர்தல் ஆணையத்தில் புகார்கள் கொடுத்துள்ளனர். அதோடு வாக்காளர் பட்டியலில் முறைகேடு என அதிமுக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும்,நேற்று (வெள்ளிக்கிழமை) ராஜாஜிபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த நாம் தமிழர் கட்சியினரை திமுகவினர் தாக்கியதாக சர்ச்சை என பல்வேறு சர்ச்சைகள் சூழ்ந்த பகுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி அமைந்துள்ளது.
இந்த நிலையில் தான், எடப்பாடி பழனிசாமி பெயரில் கடிதம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில், "கண்ணன் குலத்தை சேர்ந்த நமது பங்காளிகள் கழக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும், கண்ணன் குலத்தில் நானும் ஒருவன் என்ற முறையில் இதனை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று எழுதப்பட்டுள்ளது.
-
அனுப்புநர்
— Gowri Sankar D (@GowriSankarD_) February 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
எடப்பாடி K.பழனிசாமி
அஇஅதிமுக இடைக்கால பொதுச்செயலாளர்
சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்
நெடுஞ்சாலை நகர்
சேலம் - 600005
எல்லாம் சரி சேலத்துல எங்க 600005 ? ஏன் டா கொண்டையை மறைக்க தெரியாத @isai_, கபோதி. pic.twitter.com/oV6TqjNxm2
">அனுப்புநர்
— Gowri Sankar D (@GowriSankarD_) February 17, 2023
எடப்பாடி K.பழனிசாமி
அஇஅதிமுக இடைக்கால பொதுச்செயலாளர்
சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்
நெடுஞ்சாலை நகர்
சேலம் - 600005
எல்லாம் சரி சேலத்துல எங்க 600005 ? ஏன் டா கொண்டையை மறைக்க தெரியாத @isai_, கபோதி. pic.twitter.com/oV6TqjNxm2அனுப்புநர்
— Gowri Sankar D (@GowriSankarD_) February 17, 2023
எடப்பாடி K.பழனிசாமி
அஇஅதிமுக இடைக்கால பொதுச்செயலாளர்
சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்
நெடுஞ்சாலை நகர்
சேலம் - 600005
எல்லாம் சரி சேலத்துல எங்க 600005 ? ஏன் டா கொண்டையை மறைக்க தெரியாத @isai_, கபோதி. pic.twitter.com/oV6TqjNxm2
இந்த கடிதத்தில் அனுப்புநர், எடப்பாடி கே.பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் , பெறுநர் பி.லோகநாதன், முனிசிபல் காலனி, ஈரோடு-4 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடித்தத்தை ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
-
நான் உங்க ஜாதி, நாம பங்காளி முறை ஆகுது..
— ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ (@GowriG_DMK) February 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
ஜாதி மற்றும் உட்பிரிவினை சொல்லி ஓட்டு போடுங்கனு தனித்தனியா லெட்டர் போடுகிறார் எடப்பாடி பழனிசாமி..
இவர் தமிழ்நாடு அரசியலில் இருந்தே விரட்டப்பட வேண்டிய ஒரு விஷம்.. pic.twitter.com/KWJiQOrkf3
">நான் உங்க ஜாதி, நாம பங்காளி முறை ஆகுது..
— ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ (@GowriG_DMK) February 18, 2023
ஜாதி மற்றும் உட்பிரிவினை சொல்லி ஓட்டு போடுங்கனு தனித்தனியா லெட்டர் போடுகிறார் எடப்பாடி பழனிசாமி..
இவர் தமிழ்நாடு அரசியலில் இருந்தே விரட்டப்பட வேண்டிய ஒரு விஷம்.. pic.twitter.com/KWJiQOrkf3நான் உங்க ஜாதி, நாம பங்காளி முறை ஆகுது..
— ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ (@GowriG_DMK) February 18, 2023
ஜாதி மற்றும் உட்பிரிவினை சொல்லி ஓட்டு போடுங்கனு தனித்தனியா லெட்டர் போடுகிறார் எடப்பாடி பழனிசாமி..
இவர் தமிழ்நாடு அரசியலில் இருந்தே விரட்டப்பட வேண்டிய ஒரு விஷம்.. pic.twitter.com/KWJiQOrkf3
இந்த கடிதம் தொடர்பாக ஈரோடு மாவட்ட அதிமுக நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டோம், "இப்படி ஒரு கடித்ததை அதிமுக சார்பில் யாருக்கும் அனுப்பவே இல்லை. அதிலும் குறிப்பாக அந்த கடிதம் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் கவரில் உள்ள பின்கோடு எண் சேலத்தில் இல்லவே இல்லை. திட்டமிட்டே அதிமுகவுக்கு எதிராக இணையத்தில் பரப்பி வருகின்றனர்" இவ்வாறு கூறினர்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்கு சேகரிப்பில் திமுக, நாதக இடையே மோதல்!