ETV Bharat / state

வேட்புமனு தாக்கலுக்கே ஆயிரம் பேருடன் திரண்ட அதிமுக வேட்பாளர் - கரோனா விதிமுறைகளை மீறிய அதிமுக வேட்பாளர்

கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல் வேட்புமனு தாக்கல் செய்வதற்கே ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் திரண்ட பவானிசாகர் தனித்தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஏ. பண்ணாரி மீது மருத்துவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

AIADMK candidate rallied with a thousand people to file his nomination

author img

By

Published : Mar 18, 2021, 1:07 PM IST

ஈரோடு: வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையவுள்ளதால் தேர்தலில் போட்டியிட விரும்பும் பலரும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். கரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், வேட்புமனு தாக்கல் செய்யும்போது, வேட்பாளருடன் இருவர் மட்டுமே வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தனி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஏ பண்ணாரி, வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ரங்க சமுத்திரத்திலிருந்து புறப்பட்டார். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக சரக்கு வானத்தின் மூலம் பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்களும் அங்கு சென்றுள்ளனர்.

வேட்புமனு தாக்கலுக்கே ஆயிரம் பேருடன் திரண்ட வேட்பாளர்

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை துளியும் கடைபிடிக்காமல் அங்கு ஏராளமானோர் திரண்டதால், அவர்கள் அனைவரும் தேர்தல் அலுவலகத்திற்கு 200 மீட்டருக்கு முன்னதாகவே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில், கரோனா பரவலின் அபாயத்தை உணராமல் மக்கள் இவ்வாறு செயல்படுவது வருத்தமளிப்பதாக மருத்துவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.