ETV Bharat / state

பவானிசாகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.பண்ணாரி வெற்றி - அதிமுக வேட்பாளர் ஏ.பண்ணாரி

ஈரோடு: இரண்டாவது முறையாக மீண்டும் பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.பண்ணாரி வெற்றிபெற்றார்.

அதிமுக வேட்பாளர் ஏ.பண்ணாரி
பவானிசாகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.பண்ணாரி வெற்றி
author img

By

Published : May 3, 2021, 12:00 PM IST

தமிழ்நாட்டில் அதிமுக அரசின் பதவிக்காலம் இந்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடைவதால், இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை பிப்ரவரி மாத இறுதியில் அறிவித்தது. இதன்படி ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

பவானிசாகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.பண்ணாரி வெற்றி

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் (தனி) சட்டப்பேராவை தொகுதியில், மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரத்து 249 வாக்காளர்கள் உள்ளனர். ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற்ற தேர்தலில், மொத்தம் 2 லட்சத்து 1,345 வாக்குகள் பதிவாகின. மொத்த வாக்குகளில் 77.37 சதவீதம் வாக்குகள் பதிவானது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணுவதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோபி கலை அறிவியல் கல்லூரி பாதுகாப்பு அறையில் இருந்து கொண்டு வரப்பட்டு வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இதில் முதல் சுற்று முதலே அதிமுக வேட்பாளர் பண்ணாரி தொடர்ந்து முன்னிலை பெற்றார். 27ஆவது சுற்று முடிவில் அதிமுக பண்ணாரி மொத்தம் 99 ஆயிரத்து 181 வாக்குகள் பெற்று இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுந்தரத்தை விட 16 ஆயிரத்து 8 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

சுந்தரம் 83 ஆயிரத்து 173 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பிடித்தார். இதேபோல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சங்கீதா 8 ஆயிரத்து 517 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் கார்த்திக் குமார் 4 ஆயிரத்து 297 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ரமேஷ் 2 ஆயிரத்து 197 வாக்குகளும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சக்திவேல் 1,197 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவிற்கு 2005 வாக்குகள் பதிவானது. வெற்றி பெற்ற பவானிசாகர் தொகுதி அதிமுக வேட்பாளர் பண்ணாரி மற்றும் கோபி சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: கொளத்தூரில் இருந்து கோட்டையேறுகிறார் ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.