ஈரோடு: அதிமுக கழக அமைப்புத் தேர்தலுக்கான வேட்புமனு பெறும் நிகழ்ச்சி ஈரோடு அதிமுக கட்சி அலுவலகத்தில் நேற்று (டிசம்பர் 13) நடைபெற்றது. அதில், ஈரோடு கழக அமைப்புத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தேர்தலில் போட்டியிடும் தொண்டர்களின் வேட்புமனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய வேலுமணி, “அதிமுக உள்கட்சித் தேர்தலில் போட்டியிட தொண்டர்கள் எழுச்சியுடன் வேட்புமனுவை வழங்கிவருகிறார்கள். இதைப் பார்க்கும்போது எந்தக் கொம்பாதி கொம்பன் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது எனத் தெரிகிறது.
அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்கள்தாம் தற்போதைய திமுக அரசு செயல்படுத்திவருகிறது. மக்கள் இயக்கமாக மக்களின் பிரச்சினைகளுக்கு முன்நிற்கும் இயக்கமாக அதிமுக உள்ளது” என்றார்.
இதையும் படிங்க: 'அடுத்தாண்டு ஜனவரி 3ஆம் தேதி முதல் மேல்நிலைப்பள்ளிகளில் சுழற்சிமுறை ரத்து'