ETV Bharat / state

ஆசனூர் அருகே ஜாலியாக சாலையை கடந்த யானைகள்! - sathiyamangalam

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள நான்கு யானைகள் தண்ணீருக்காக தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றன.

சாலையை கடந்து செல்லும் யானைகள்
author img

By

Published : Jul 17, 2019, 3:52 PM IST

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. ஆனால், பருவமழை சரிவர பெய்யாததால் தலமலையில் உள்ள குட்டைகள் அனைத்தும் வறண்டு காணப்படுகின்றன. இதனால் தலமலையில் வசிக்கும் யானைகள் தண்ணீருக்காக திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடந்து தலமலையிலிருந்து ஆசனூருக்கு வரத்தொடங்கிவிட்டன.

குடிநீரைத் தேடி யானைகள் சாலையை கடந்து செல்வதால் 30கி.மீ க்கும் குறைவான வேகத்தில் வாகனத்தை இயக்கவேண்டும் என வனத்துறை சார்பில் ஆங்காங்கே விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் இன்று நான்கு யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக சாலையை கடந்து சென்றன.

அப்போது சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் யானைகள் சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்லும் வரை காத்திருந்து பின்னர் புறப்பட்டு சென்றனர்

Intro:nullBody:tn_erd_03_sathy_elephant_cross_vis_byte_tn10009

ஆசனூர் அருகே ஜாலியாக தேசிய நெடுஞ்சாலையை கடந்த யானைகள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் ஜாலியாக சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. பருவமழை பொய்த்துவிட்டதால் வனப்பகுதியில் உள்ள குட்டைகள் வறண்டு போயின. ஓடைகளில் தண்ணீர் மணல் திட்டுகளாக காட்சியளிக்கின்றனர். இதனால் காட்டுயானைகள் தண்ணீர் தீவனம் தேடி தலமலையில் இருந்து ஆசனூர் சாலைக்கு இடம் பெயருகின்றன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் திண்டுக்கல் பெங்களுரு தேசிய நெடுங்சாலை அமைந்துள்ளது. தீவனம் மற்றும் குடிநீர் தேடி தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வதால் 30 கிமீ தூரம் வேகத்துக்கு குறைவாக வாகனத்தை இயக்க வேண்டும் என வனத்துறை சார்பில் ஆங்காங்கே விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 4 யானைகள் நீண்ட நேரம் ஆசனூர் மலைப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் மரக்கிளைகளை முறித்து சாப்பிடுகின்றன. சிறிதுநேரத்துக்கு பின் யானைகள் ஒவ்வொன்றாக தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றன. அப்போது சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் யானைகள் சாலையை கடக்கும் வரை காத்திருந்து பின்னர் யானைகள் வனப்பகுதிக்குள் சென்றபின் புறப்பட்டு சென்றனர். அண்மையில் வனவிலங்குகள் கணக்கெடுப்பின்படி யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்

Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.