ETV Bharat / state

கீழ்பவானி பாசன வாய்க்காலில் குளிக்கச் சென்ற இளைஞர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள குப்பன்துறை கீழ்பவானி பாசன வாய்க்காலில் குளிக்கச் சென்ற இளைஞர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.

ஆற்றில் மூழ்கி பலியான  விக்னேஸ்
ஆற்றில் மூழ்கி பலியான விக்னேஸ்
author img

By

Published : Oct 16, 2021, 9:20 AM IST

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள குப்பன்துறை பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் மகன் விக்னேஸ். இவர் பின்னல் ஆடை நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பின்னாலடை நிறுவனங்கள் விடுமுறை என்பதால் குப்பன்துறை பகுதி வழியாகச் செல்லும் கீழ்பவானி வாய்க்களுக்கு தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார்.

இரவானதால் மீட்பில் தாமதம்

அப்போது கீழ்பவானி வாய்க்காலில் அதிக அளவு நீர் சென்றுகொண்டிருந்ததால், விக்னேஸ் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட சக நண்பர்கள், இது குறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளனர்; அவர்கள் உடனே சத்தியமங்கலம் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மாயமான விக்னேசை தேடிவந்த நிலையில் தொடர் மழை காரணமாகவும், இரவானதாலும் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுத் திரும்பிச் சென்றனர்.

மறுநாள் உடல் மீட்பு

இந்நிலையில், நேற்று மாயமான இடத்திலிருந்து சிறிது தூரத்தில் விக்னேசின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைக் கண்ட பொதுமக்கள் சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் விக்னேசின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இச்சம்வம் குறித்து கடத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்துவருவதால் வாய்க்கால்களில் அதிக அளவு நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் யாரும் குளிக்கவோ துணிகள் துவைக்கவோ செல்ல வேண்டாம் எனக் காவல் துறை, தீயணைப்புத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை' - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.