ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக செல்லும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையில் காட்டு யானைகள் நடமாடுவது வழக்கம். அந்த வகையில் காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே நேற்று 2 காட்டு யானைகள் உலாவிக்கொண்டிருந்தன.
அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்தை யானைகள் வழி மறித்தன. இதனால் பேருந்து ஓட்டுநர் வாகனத்தை இயக்காமல் நிறுத்தினார். அப்போது ஒரு காட்டு யானை மெதுவாக பேருந்தின் முன் பகுதிக்கு வந்து முன் பக்க கண்ணாடியை முட்டி தள்ளியது. இதனால் கண்ணாடி உடைந்தது. இந்த சத்தம் கேட்ட பயணிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து யானை வனப்பகுதிக்குள் சென்றன. இதனை பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி