ETV Bharat / state

30 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் நீதிமன்றம்

ஈரோடு: தனியார் திருமண மண்டபத்தில் இயங்கி வரும் சத்தியமங்கலம் நீதிமன்றத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

30 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் நீதிமன்றம்
author img

By

Published : May 28, 2019, 9:36 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 1988ஆம் ஆண்டு முதல் நீதிமன்றம் இயங்கி வருகிறது. மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், நீதித்துறை குற்றவியல் நீதிமன்றம் என 3 நீதிமன்றங்கள் உள்ளன. சத்தியமங்கலத்தில் நீதிமன்றத்திற்கென சொந்த கட்டிடம் இல்லாததால் தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் கடந்த 30 ஆண்டுகாலமாக வாடகைக்கு இயங்கி வருகிறது. இதுவரை ரூ. 2 கோடிக்கு மேல் அரசு சார்பில் வாடகையாக செலவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2007ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் சத்தியமங்கலத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கென கோபிசெட்டிப்பாளையம் சாலையில் உழவர் சந்தை அருகே உள்ள மூன்று ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அந்த இடத்தை வாங்குவதில் சில சிக்கல்கள் ஏற்பட்ட நிலையில், நீதிமன்றத்திற்கான நிலத்தை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து, சத்தியமங்கலம் அரசு கலைக்கல்லூரி அருகே வருவாய்த்துறைக்கு சொந்தமான ஒன்பது ஏக்கர் நிலம் நீதித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்துவதற்காக இடம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் இதற்கெ ன நிதி நீதித்துறையில் இன்னும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே விரைவில், நீதிமன்ற வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சத்தியமங்கலம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனியார்  திருமணமண்டபத்தில் இயங்கி வரும் சத்தியமங்கலம் நீதிமன்றத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட  பொதுமக்கள் கோரிக்கை   
--
;டி.சாம்ராஜ்,
செய்தியாளர்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216
 
TN_ERD_04_28_SATHY_COURT_BUILDING_VIS_TN10009
(Visual  FTP இல் உள்ளது)

தனியார்  திருமணமண்டபத்தில் இயங்கி வரும் சத்தியமங்கலம் நீதிமன்றத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட  பொதுமக்கள் கோரிக்கை 

ஈரோடு   மாவட்டம்  சத்தியமங்கலத்தில் கடந்த 1988 ம் ஆண்டு முதல் நீதிமன்றம் இயங்கி வருகிறது. இதில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், நீதித்துறை குற்றவியல் நீதிமன்றம் என 3 நீதிமன்றங்கள் உள்ளன. நீதிமன்றத்திற்கென சொந்த கட்டிடம் இல்லாததால் தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டிடத்தில்தான் கடந்த 30 ஆண்டுகாலமாக நீதிமன்றங்கள் இயங்கிவருகிறது. தற்போது தனியார் திருமண மண்டபத்தில் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. நீதிமன்ற வாடகையாக அரசு சார்பில் இதுவரை ரு.2 கோடிக்கு மேல் கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2007 ம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியில் சத்தியமங்கலத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கென வேளாண்மைத்துறையின் கட்டுப்பாட்டில்  கோபிசெட்டிபாளையம் சாலையில் உழவர் சந்தை அருகே உள்ள 3 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.  வருவாய்த்துறை நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்தாலும் வேளாண்மைத்துறை நிலத்தை வழங்க மறுத்ததால் நீதிமன்றத்திற்கென நிலம் தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் சத்தியமங்கலம் அரசு கலைக்கல்லூரி அருகே வருவாய்த்துறைக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலம் நீதித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்துவதற்காக பரந்த அளவிலான இடம் நீதித்துறைக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும் இதற்கென நீதித்துறையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே சத்தியமங்கலத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்க    வேண்டும்  என சத்தியமங்கலம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.