ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரிஅம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாதம் ஒருமுறை உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். இந்நிலையில், நேற்று பண்ணாரிஅம்மன் கோயிலின், துணை ஆணையர் சபர்மதி, ஈரோடு இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையர் நந்தகுமார், கோயில் பரம்பரை அறங்காவலர்கள் முன்னிலையில் 20 உண்டியல்கள் திறக்கப்பட்டன.
பின்பு, ராஜன்நகர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்களும், கோயில் பணியாளர்களும், சத்தியமங்கலம் பண்ணாரிஅம்மன் தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்களும்,எஸ்.ஆர்.டி பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவியரும், பணம் எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில், மொத்த உண்டியலின் வசூல் ரூ.37 லட்சத்து 41ஆயிரத்து 6ரூபாயும், 331 கிராம் தங்கமும், 470 கிராம் வெள்ளியும் இருந்ததாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : ரயிலடி பிள்ளையார் கோயில் பணம் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு