ETV Bharat / state

கர்நாடக மதுபானங்கள் கடத்தல்: 3 பேர் கைது - liquor smuggling

ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதி வழியாக கர்நாடக மதுபானங்கள் கடத்திய மூன்று பேரை காவல் துறையினர் கைதுசெய்து 284 மதுபான பாக்கெட்டுகளைப் பறிமுதல்செய்தனர்.

கர்நாடக மதுபானங்கள் கடத்தல்: 3 பேர் கைது

author img

By

Published : Jun 3, 2021, 1:43 PM IST

கர்நாடக மாநிலத்திலிருந்து மதுபான பாக்கெட்டுகள் கடம்பூர் மலைப் பகுதிக்குக் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் கடம்பூர் காவல் துறையினர் மாக்கம்பாளையம் மலை கிராமத்தில் உள்ள பள்ளத்தில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த மூன்று பேரைப் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் கொண்டுவந்த சாக்குப்பைகளில் கர்நாடக மாநிலத்திலிருந்து 284 மதுபான பாக்கெட்டுகள் கடத்திவந்தது தெரியவந்தது.

தற்போது கரோனா ஊரடங்கு காலம் என்பதால் தமிழ்நாட்டில் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள மதுபான கடைகளிலிருந்து மதுபானங்களை வாங்கிவந்து கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் கூடுதல் விலைக்கு விற்க முயன்ற மாக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து, சின்னகுன்றி கிராமத்தைச் சேர்ந்த குமரேசன், கர்நாடக மாநிலம் ஜல்லிப்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய மூன்று பேரிடமிருந்து 284 மதுபான பாக்கெட்டுகள், மூன்று இருசக்கர வாகனங்களைப் பறிமுதல்செய்தனர்.

தொடர்ந்து, மூன்று பேர் மீது வழக்குப்பதிவுசெய்த கடம்பூர் காவல் துறையினர் கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: விஜயவாடாவிலிருந்து சென்னை வந்ததடைந்த மருத்துவ உபகரணங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.