ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சித்தோடு காமதேனு நகர் பகுதியில் வசித்து வருபவர் சையத் காதர். இவர் பெருந்துறையில் மின்பாதை ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று இரவு பணிக்காக வேலைக்குச் சென்றுவிட்டார். இரவு நேர பணிக்குச் செல்வதால் அவருடைய மனைவியை, உறவினர் வீட்டில் தங்க வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டுருந்திருக்கிறது. பின் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 10 பவுன் நகை, ஒரு லட்சம் ரூபாய் பணம் திருடு போனது தெரியவந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த காதர், சித்தோடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதன் பேரில் சித்தோடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து திருட்டு சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: 'நான் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றிபெறுவேன்''- லலிதா ஜுவல்லரி கொள்ளையன் முருகன்!