தாய்லாந்து நாட்டிலிருந்து ஈரோடு வந்த இருவருக்கு கரோனோ வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யபட்டதை தொடர்ந்து, அவர்களுடன் இருந்த 15 நபர்கள் கரோனோ வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த சுல்தான்பேட்டை , கொல்லம்பாளையம் பகுதிகள் மூடப்பட்டு அங்குள்ள 164 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வீடுகளிலேயே தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில், கொல்லம்பாளையம், புது மஜீத்வீதி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் அதிக காய்ச்சல் காரணமாக இன்று பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு கரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என பரிசோதனை செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரைக்கு வந்த வெளிநாட்டவருக்கு கரோனா அறிகுறி: மருத்துவமனையில் சிகிச்சை