ETV Bharat / state

குறைந்த விலைக்கு மதுபானம் கேட்டு அலப்பறை செய்த குடிமகன்

வேடசந்தூரில் மதுபான பாட்டிலை குறைவான விலைக்கு கேட்டதால் தர மறுத்த சேல்ஸ்மேனிடம் தகராறு செய்து, கடையின் முன்பு இருந்த டேபிளை தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்ட இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 5, 2023, 7:42 PM IST

குறைந்த விலைக்கு மதுபானம் கேட்டு அலப்பறை செய்த குடிமகன்

திண்டுக்கல்: வேடசந்தூர் குங்கும காளியம்மன் கோயில் அருகே டாஸ்மாக் கடை எண் 3224 இயங்கி வருகிறது. இந்தக் கடையில் சேல்ஸ்மேனாக கண்ணையன் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

கடையில் மதுபான விற்பனை நடைபெற்று கொண்டிருந்தபோது அங்கு வந்த வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்ற இளைஞர் மதுபான பாட்டிலை குறைவான விலைக்கு கேட்டுள்ளார். இதற்கு சேல்ஸ்மேன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ராஜசேகர், கடையின் முன்பு இருந்த டேபிளை தள்ளிவிட்டு அதன் மேல் இருந்த அட்டைப் பெட்டிகளை தன் காலால் எட்டி உதைத்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அந்நபரை பிடித்து வேடசந்தூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், ராஜசேகரை வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: சினிமா பாணியில் கார் திருட்டு: போலீசார் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.