திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் விராலிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் என்பவரின் மகள் கௌசல்யா. இவர் ஒட்டன்சத்திரம் கண்ணனுரை பகுதியைச் சேர்ந்த மகுடீஸ்வரன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் சென்னையில் ஒன்றாக வேலைக்கு சேர்ந்து, அங்கேயே திருமணமும் செய்துள்ளனர். சென்னையில் மூன்று மாதம் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். அதன்பின்னர் இருவரும் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.
கருக்கலைப்பு
அப்போது கௌசல்யா கர்ப்பமானதை அறிந்த மகுடேஷ்வரன், பரிசோதனைக்காக அழைத்துச் செல்வதாக கூறி கௌசல்யா அனுமதி இல்லாமல் மயக்க ஊசி செலுத்தி அவருக்கு கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின் மகுடீஸ்வரன் கௌசல்யாவை பிரிந்து சென்றுள்ளார்.
இளம்பெண் தர்ணா
இதனால் கௌசல்யா மகுடேஷ்வரனின் வீட்டுக்குச் சென்று நியாயம் கேட்டிருக்கிறார். அங்கு அவரது உறவினர்கள், கௌசல்யாவிடம் 'உங்கள் சாதிக்கும் எங்கள் சாதிக்கும் ஒத்து வராது' என்று கூறி திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.
இது சம்பந்தமாக ஒட்டன்சத்திரம் மகளிர் காவல் நிலையத்தில் கெளசல்யா புகார் கொடுத்துள்ளார். ஆனால் அவருக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் கெளசல்யா மற்றும் அவரது தந்தை, தாய் ஆகியோர் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின் கௌசல்யாவிடம் மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவினரை கைது செய்த காவல் துறையினர்