ETV Bharat / state

தாய் இறந்த துக்கம் தாங்காமல் கிணற்றில் குதித்து மகள் தற்கொலை! - மகள் நாகலட்சுமி வயது 44

வத்தலக்குண்டு அருகே தாய் இறந்த மனவேதனையில் மகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

தாய் இறந்த துக்கம் தாங்காமல் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை..!

author img

By

Published : Aug 9, 2022, 4:27 PM IST

திண்டுக்கல் அடுத்து வத்தலக்குண்டு அருகே முத்துலாபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுந்தர்ராஜ் ,ராக்கம்மாள் இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில் மகனுக்குத் திருமணம் முடிந்து விட்டது. பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு சுந்தர்ராஜ் இறந்துவிட்டார். ராக்கம்மாள் மற்றும் மகள் நாகலட்சுமி இருவரும் தனியாக இருந்து வந்தனர்‌. இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக தாய் ராக்கம்மாளும் உடல்நலக்குறையால் இறந்துவிட்டார்.

இந்நிலையில் மகள் நாகலட்சுமி வயது 44 (திருமணம் ஆகாத பெண்) திடீரென்று நேற்று மாலை முதல் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காவல் துறையினர் தேடிவந்த நிலையில் இன்று(ஆகஸ்ட்09) முத்துலாபுரம் அருகிலுள்ள கிணற்றில் ஒரு பெண் சடலம் இருப்பது தெரியவந்தது. அருகில் இருந்த பொதுமக்கள் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் இணைந்து பெண்ணின் சடலத்தை மீட்டு வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விசாரணையில் அந்தசடலமாக மீட்டெடுக்கப்பட்டவர் முத்தலாபுரத்தைச்சேர்ந்த சுந்தர்ராஜ், ராக்கம்மாள் இவர்களின் மகள் நாகலட்சுமி என்பது தெரியவந்தது. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அம்மா இறந்த மன வேதனையில் இன்று அருகில் உள்ள கிணற்றில் குதித்து மகள் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தற்கொலைச்சம்பவம் குறித்து பட்டிவீரன்பட்டி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கடிதம்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.