ETV Bharat / state

மதுபோதையில் தகராறு செய்த கணவரை கடப்பாரையால் தாக்கி கொலை செய்த மனைவி! - Wife Killed Husband news

Wife Killed Husband at Dindigul: மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி பணம் கேட்டு மனைவியை கொலை செய்ய துணிந்த நபரை தற்காப்புக்காக அவரது மனைவி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

போலீசில் சரணடைந்த மனைவி
தற்காப்புக்காக தாக்கியதில் மது போதையில் இருந்த கணவர் உயிரிழப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2023, 6:52 PM IST

திண்டுக்கல்: மதுப்பழக்கத்தால் பணம் கேட்டு மனைவியை கொலை செய்ய முயன்ற கணவனை, தற்காப்புக்காக மனைவி தாக்கியதில் கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை தொடர்ந்து கொலை குறித்த விசாரணையை போலீசார் நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம், கோவில்பட்டி ராஜா குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(40). இவர் வெளிமாநிலங்களுக்கு செல்லும் டிப்பர் லாரிகளை ஓட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகிய நிலையில் மனைவி பாண்டீஸ்வரி (33) மற்றும் 4 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளது. இந்நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான ராஜேந்திரன் 24 மணி நேரமும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாகவே அதிக மது போதையில் இருந்த ராஜேந்திரன் மனைவியிடம் மது வாங்க பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் பணம் தராவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சென்னையில் ஐடி பெண் ஊழியர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு!

இந்நிலையில் இன்று அதிகாலை ராஜேந்திரன் தனது மனைவியை கடப்பாரை கொண்டு தாக்க முயன்றுள்ளார். அப்போது தன்னை தற்காத்துக் கொள்ள மனைவி பாண்டீஸ்வரி கடப்பாரையை கணவரிடம் இருந்து பிடுங்கி அதனை கொண்டு தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து மனைவி பாண்டீஸ்வரி தாமாக சென்று நத்தம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த நத்தம் காவல்துறையினர் ராஜேந்திரனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதை தொடர்ந்து கொலை குறித்த விசாரணையை போலீசார் நடத்தி வருகின்றனர். மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட இந்த கொலை சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் ஐடி பெண் ஊழியர் எரித்துக்கொலை.. போலீசார் விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.