திண்டுக்கல்: ஆத்துமேடு ராஜகோபாலபுரம் பகுதியில் புனை பெயருடன் மிரட்டலாக வளம் வரும் கோட்டை கருப்பையா, என்பவரும் லட்சுமி என்ற அவருடைய மனைவியும் அதே பகுதியில் வசித்து வருகிறார்கள். அவரது மனைவி லட்சுமி, மனைவியின் தாயார் ஜெயகணி மற்றும் மனைவியின் அக்கா தன்பாக்கியம் ஆகிய மூவரும் அருகருகே பூ மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்கள்.
லட்சுமி கணவரான கோட்டை கருப்பையா வேலை செய்யாமல் சும்மா இருப்பதில் வடிவேலின் கதாபாத்திரத்தை மிஞ்சியவர் இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். ஆத்துமேடு பகுதியில் தனது குடும்பத்தில் உள்ள மூன்று பெண்கள் காய்கறி, பூ வியாபாரங்கள் செய்து வருவதால் அவர்கள் வியாபாரம் செய்யும் இடம் அருகே உள்ள பிற கடைக்காரர்களுடன் வெட்டியாக வாய் அடித்துக் கொண்டு இருக்கும் இவர் அக்கம் பக்கத்தினரிடம் 20, 30 என வாங்கி மது அருந்திவிட்டு, ஊர் சுற்றி வருவது வழக்கமாக வைத்துள்ளார்.
சந்தைக்குப் பிரசித்தி பெற்ற வேடசந்தூரில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி போன்ற மாவட்டங்களிலிருந்து வியாபாரிகளும் சுற்றுப்பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள பொதுமக்களும் இச்சந்தையின் மூலமாகப் பயன்பெறுவதின் காரணமாக இங்குக் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.
சந்தை நாளில் கூடுதலாகக் காய்கறி விற்பனையிலும், பூ விற்பனையிலும் மும்முரம் காட்டி வந்த பெண்கள் மது அருந்தக் காசு கொடுக்காததால் கடுப்பாகிய கோட்டை கருப்பையா அவரது மனைவி, மாமியார், மனைவியின் அக்கா ஆகிய மூன்று பெண்களிடமும் தகராற்றில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் கோபத்துடன் பாதியில் வியாபாரத்தை விட்டுவிட்டு மனைவி லட்சுமி வீட்டுக்குச் சென்று விட்டார். மாமியாரிடமும், மனைவியின் அக்காவிடமும் குடிப்பதற்குக் காசு கேட்டு தொந்தரவு செய்து கொண்டிருந்த கோட்டை கருப்பையாவிடம், இரண்டு பெண்களும் தங்களுடைய சுயரூபத்தை காட்ட ஆரம்பித்து விட்டார்கள். முதலில் மனைவியின் அக்கா கருப்பையாவைச் செல்லமாக விளக்குமாறு கொண்டு அடித்தார். விளக்கமாத்தில் வெலுவெளுவென வெளுத்தார். அத்துடன் விடாமல் மாமியார் அவரது பங்குக்கு விளக்குமாற்றால் வெளுத்தார். விளக்குமாற்றில் அடித்தும் திருப்தி அடையாத மாமியார் செருப்பைக் கழட்டியும் மருமகனுக்குச் சிறப்பு மரியாதை செய்தார்.
சிறிதும் சலனமின்றி அடி வாங்கிக் கொண்டிருந்த கோட்டை கருப்பையா ஒரு கட்டத்தில் கோபம் முற்றி மண்ணை வாரி தூவி எனக்கு குடிப்பதற்கு காசு கொடுக்கவில்லை என்றால் நாசமாக போய் விடுவீர்கள் என்று அவர்கள் கொடுத்த தட்சணையை வாங்கிவிட்டு கெத்தாக அருகில் உள்ள கடையில் சென்று அமர்ந்து கொண்டார்.
இரண்டு பெண்கள் விளக்கமாற்றாலும், செருப்பாலும் ஒரு ஆணை அடிக்கிறார்களே..? அந்த இரு பெண்களிடம் ஏதேனும் தவறு செய்திருப்பார் அதனால் வாங்கிக் கொண்டிருக்கிறார் என்று பாதசாரிகளும் வாகன ஓட்டிகளிலும் நின்று பார்த்து கொண்டிருந்த நிலையில், மனைவி, மாமியார் மனைவியின் அக்கா என மூவரிடமும் மது குடிப்பதற்காக காசு கேட்டு தகறாரில் ஈடுபட்டு இவ்வாரு வாங்கிக் கட்டியதை அறிந்து சிரித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
இதையும் படிங்க: நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயற்சி - அமெரிக்க பயணி மீது வழக்கு!