தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதனால் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இந்த நிலையில் ஜூலை 10ஆம் தேதி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேரூராட்சி & கிராமப் பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக, 'ஜூலை 11 முதல் ஜூலை 20 வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்' என அறிவித்தார்.
அதற்கு வியாபாரிகளும் ஒத்துழைப்பு அளித்த நிலையில், இன்று ஜூலை 11ஆம் தேதி முதல் நத்தம் பேரூராட்சி மற்றும் வட்ட அளவில் உள்ள 23 கிராம ஊராட்சிகளில் உள்ள கடைகள், வணிக மையங்கள் மூடப்பட்டுள்ளன.
அதில் பால், மருந்தகங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், அப்பகுதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் நத்தம் பகுதிகளில் இதுவரை, 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிளாஸ்மா சிகிச்சை வெற்றி - அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்