திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் மட்டும் கனமழை பெய்து வந்தது.
இதனையடுத்து கொடைக்கானல் மையப் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் நீரின் அளவு முழு கொள்ளவை எட்டியது.
இதனால் நட்சத்திர ஏரியிலிருந்து நீர் வெளியேற்றம் செய்வதற்கு இரும்பு தடுப்பு 1 அடியில் திறக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு மணிநேரத்திற்கு சுமார் ஆறு ஆயிரம் லிட்டர் தண்ணீர் வெளியேறிவருவதாக கொடைக்கானல் நகராட்சி உதவி பொறியாளர் பட்டுராஜன் தெரிவித்துள்ளார்.
இந்த நீர் பழனி வருதமாநதி செல்கிறது. இதனிடையே நீர் அதிகமாக வெளியேறி வருவதால் கரையோரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.