ETV Bharat / state

15 அடி தடுப்புச் சுவரால் 10 ஆண்டு காலப் போராட்டம் - sithayankottai farmers problem

"இந்த மண்ணுல நீர் தடம் பதிஞ்சு பத்து வருஷமாச்சு. இன்னிக்கு நாளைக்குன்னு இழுத்தடிச்சு எப்டியோ 10 வருஷம் ஓடிப்போச்சு. ஆனா இத்தன வருஷத்துல மண்ணுலயும் ஈரம் படல. பக்கத்து ஊர்க்காரங்க மனசுலயும் ஈரம் வரல" இப்படி புலம்பியே தண்ணீருக்காக காத்திருக்கும் விவசாயிகளின் கனவு எப்போதும் போல கானல் நீர்தானா? - இந்த தொகுப்பில் பார்ப்போம்.

15 அடி தடுப்புச் சுவரால் 10 ஆண்டு காலப் போராட்டம்

author img

By

Published : Sep 21, 2020, 8:30 PM IST

Updated : Sep 22, 2020, 12:26 PM IST

பெரும் பஞ்சம், பேரழிவு இரண்டிலும் தண்ணீரின் பங்கு அளப்பெரியது. இந்த பூமியில் தண்ணீருக்காக தொடங்கிய போராட்டங்கள் ஒருபோதும் தணிந்தபாடில்லை. ஆனால் தண்ணீரால் எப்போதும் விவசாயிகளுக்கும் பாமரர்களுக்கும் மட்டும்தான் கண்ணீர். வானம் பார்த்த பூமியான திண்டுக்கல்லின், தாகம் தணிக்கும் முக்கிய நீராதாரம்தான் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம். ஆனால் இந்த தண்ணீரை ஒரு பகுதி விவசாயிகள் மட்டுமே பயன்படுத்தும் அவலம் கடந்த 10 ஆண்டுகளாக அரங்கேறி வருகிறது.

15 அடி தடுப்புச் சுவரால் 10 ஆண்டு காலப் போராட்டம் - சிற்பபு தொகுப்பு

காமராஜர் அணை நீர்த்தேக்கத்திலிருந்து நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் வழியாக சித்தையன்கோட்டை பகுதிக்கு நீர் செல்கிறது. இதன் குறுக்கே 15 அடி தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்புச் சுவரால் ஒரு பகுதி விவசாயிகள் மட்டுமே பலனடைந்து வருவதாக கூறப்படுகிறது. தடுப்புக்கு அந்தப் பக்கம் உள்ள 70க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக தங்களுக்கான தண்ணீர் வேண்டும் என போராடி வருகின்றனர்.

தண்ணீர்.. தண்ணீர்.. தண்ணீர்..
தண்ணீர்.. தண்ணீர்.. தண்ணீர்..

இந்த விவகாரம் குறித்து பேசிய விவசாயி சின்னப்பன், "இந்த மண்ணுல நீர் தடம் பதிஞ்சு பத்து வருஷமாச்சு. இன்னிக்கு நாளைக்குன்னு இழுத்தடிச்சு எப்டியோ 10 வருஷம் ஓடிப்போச்சு. ஆனா இத்தன வருஷத்துல மண்ணுலயும் ஈரம் படல. பக்கத்து ஊர்க்காரங்க மனசுலயும் ஈரம் வரல. எப்பவும் அணைல இருந்து வர்ற தண்ணி சித்தையன்கோட்டை, நிலக்கோட்டை, வாடிப்பட்டிக்கு அங்கிட்டு வைகை ஆத்துல போய் சேரும். அதே மாதிரி ஆத்தூர் வழியா அனுமந்தராயன் கோட்டை, பொன்மான் துறை, புதுப்பட்டி குளம் தாண்டி அழகாபுரி அணைக்கு போகும். அங்கிருந்து கரூர் காவிரில கலக்கும். இதற்கு இடையிலுள்ள 70 கிராமத்து மக்கள் இந்த தண்ணிய மட்டும்தான் நம்பி இருந்தாங்க. இந்த தண்ணி கிடைக்காம விவசாயம் பண்ணவங்க நிறைய பேரு கடனாளியதான் ஆகிருக்கோம். விவசாயம் நாட்டோட முதுகெலும்புன்னு சொல்லிட்டே இருந்தா போதாது. அதை காப்பாத்துறதுக்கான வழியையும் அரசு எடுக்கனும்" என்று புலம்பி தவித்தார்.

ஆரம்ப காலத்தில் பாறைகளால் சூழப்பட்ட தடுப்புச் சுவர்
ஆரம்ப காலத்தில் இருந்த பாறைகளாலான தடுப்புச் சுவர்

இது குறித்து சட்டம் பயிலும் இளைஞர் ஆல்வின் ஜெகன் கூறுகையில், "சின்ன வயசுல இந்த ஆத்துல ஆடிப்பாடி விளையாண்டு சந்தோஷமா இருந்திருக்கோம். ஆயிரம் ஞாபகம் இந்த ஆத்தோட சேர்ந்திருக்கு. அது வறண்டாலும் அதோட எங்களுக்கு இருக்குற உறவு ஊத்து போல மனசுல ஊறிட்டே இருக்கு. குடகனாறு தண்ணியால செழிப்பா இருந்த எங்க ஊரு இப்ப பொட்ட காட மாறி போச்சு. தண்ணி கிடைக்காம விவசாயம் இல்லாமல் போனதால எங்க ஊர்க்காரங்க நிறைய பேர் சென்னை, கோவைன்னு வேற ஊருக்குப் பொழப்பு தேடி போயிட்டாங்க. இதுக்கெல்லாம் காரணம் அந்த தடுப்பணைதான். இந்த தடுப்பணைய 15 அடிக்கு கட்டின பிறகு மழையே வந்தாலும் எங்களுக்கு தண்ணி வர மாட்டேங்குது" என்று வேதனை தெரிவித்தார்.

ஆக்கிரமிப்பாளர்களால் எழுப்பட்டு தற்போதுள்ள ஆதிக்கச் சுவர்
ஆக்கிரமிப்பாளர்கள் எழுப்பிய ஆதிக்க தடுப்புச் சுவர்

கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தொடர் போராட்டத்தின் விளைவாக நீர்ப்பங்கீடு செய்யப்பட்டு இருவருக்கும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீர் வரும் தடத்தில் பத்து ஆண்டுகளாக சூழந்திருந்த முட்செடி, கருவேலமரங்களை ஆத்தூர் எம்எல்ஏ ஐ.பெரியசாமியின் உதவியோடு அகற்றியுள்ளனர். மழை இல்லாமல் தண்ணீருக்காக கஷ்டப்படுவது வேறு. ஆனால் தண்ணீர் இருந்தும் தங்களுக்கான தண்ணீரை பெறாத பொதுமக்களுக்கோ பெரும் ஏக்கமும் துயரமும்தான் மிஞ்சும்.

காமராசர் நீர்தேக்க அணை
காமராசர் நீர்தேக்க அணை

இது குறித்துப் பேசிய பொன்மான் துறை விவசாயி ஜோசப், "எங்க வீட்டு அலாரம் நான் வளர்த்த சேவ தான். வீட்ல இருந்த சின்னவங்க தொடங்கி பெரியவங்க வரை கால்நடைய விட்டுட்டு இருக்க மாட்டோம்‌. இதுக்காகவே உறவுக்காரங்க வீட்டுக்கு கூட போய் தங்க மாட்டோம். இப்படி இருந்த நாங்க இன்னிக்கி தண்ணி கொடுக்க முடியாம ஆடு, மாடு, கோழி வளர்ப்ப விட்டுட்டோம். நான் மட்டுமில்ல இந்த கிராமத்தில் இருந்து ஏகப்பட்ட பேர் கால்நடை வளர்ப்ப கைவிட்டுடோம். செங்காத்து வீசுன ஊர்ல இப்போ தோல் ஃபேக்டரி நாத்தம் தான் மிஞ்சிருக்கு. தோல் கழிவுகளால் நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாத அளவுக்கு உப்பு தண்ணியா மாறிடுச்சு" என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

முட்புதர்களால் சூழந்த தண்ணீரின் தடம்
முட்புதர்களால் சூழந்த தண்ணீர் வரும் பாதை

இந்த ஆண்டாவது குடகனாறு நீர் தங்களுக்கு கிடைக்குமா இல்லை எப்போதும் போல் தங்களது கனவு கானல் நீராய் போகுமா என ஏக்கத்துடன் காத்திருந்த விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைத்தது. ஆனால் மதகை தாண்டி தண்ணீர் சென்றால் செல்லட்டும், ஒருபோதும் தடுப்புச் சுவரை தகர்க்க மாட்டோம் என்று ஒரு பகுதியினர் மெத்தனம் காட்டுகின்றனர். மும்மாரி பெய்த காலம் மாறியுள்ள தற்போதைய நிலையில் 15 அடி தடுப்புச் சுவரை தாண்டி தண்ணீர் வருவது எப்படி சாத்தியாமாகும். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் எழும் சுவர் அரசியல், தடுப்புச் சுவரின் பேரில் தண்ணீருக்காக எழுவது வேதனைக்குரியது. அதனால் அரசின் சரியான நடவடிக்கைதான் 60க்கும் மேற்பட்ட கிராமத்தின் தாகத்தை தணிக்கும்.

இதையும் படிங்க: மீண்டும் தலைதூக்கும் முல்லைப்பெரியாறு விவகாரம்

Last Updated : Sep 22, 2020, 12:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.