திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, " கொள்கை ரீதியாக உடன்பட்டுள்ள கட்சிகளுடன் தற்போது கூட்டணியில் உள்ளோம். தேர்தல் நேரத்தில் வேறு சில கட்சிகளும் கூட்டணியில் இணையும்.
தமிழகத்தில் 65 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் சக்தியாக பாஜக உள்ளதாக மாநிலத்தலைவர் முருகன் தெரிவித்ததை, 65 தொகுதிகள் கேட்பதாக தவறாகப் பரப்புகின்றனர். பழனி தொகுதி எப்போதுமே பாஜகவிற்கு சாதகமான தொகுதி என்பதால், கூட்டணிக் கட்சிகளுடன் பேசி பழனி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட முயற்சி செய்வோம்.
சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற பொய் பிரசாரத்தை உணர்ந்து, சிறுபான்மையினர் அதிகளவில் தற்போது பாஜகவில் சேர்ந்து வருகின்றனர். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் குறித்த திரைப்படத்தில், விஜய் சேதுபதி நடிப்பதில் எந்த தவறும் இல்லை. இது விஜய் சேதுபதியின் தனிப்பட்ட உரிமை. அதில் அரசியல் கலப்பது சரியல்ல " எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இனத்துரோகி வேடத்தில் இனப்பற்றாளரா? - ’800’க்கு வலுக்கும் எதிர்ப்பு!