திண்டுக்கல்: பொன்மாந்துறை புதுப்பட்டியை சார்ந்த ராசு என்ற இருளப்பன் (40). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஹேமலதா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் ஆன நிலையில் 2வது மகள் 12 ஆம் வகுப்பும், ஒரு மகன் தொழிற் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தும் வருகிறார். இவர் பொன்மாந்துறை புதுப்பட்டியில் புதிதாக வீடு விலைக்கு வாங்கி அதில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 07) இருளப்பன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். பின்னர் மதியம் உணவு அருந்திவிட்டு கணவன் மனைவி இரண்டு பேரும் தூங்கிக் கொண்டிருந்த பொழுது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 6 பேர் வீட்டிற்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த இருளப்பனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே இருளப்பன் பரிதாபமாக உயிர் இழந்தார்.
இது தொடர்பாக திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் நிலம் வாங்கியது தொடர்பாக இருளப்பனுக்கும் மற்றொரு நபருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளதாகவும் அதன் காரணமாக இந்த கொலை நடந்து உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: ஆந்திராவில் அரங்கேறிய வெறிச்செயல்: தந்தையின் கொலை சதியில் இருந்து துரிதமாக மீண்ட 13 சிறுமி!
இரண்டாவது கொலை: திண்டுக்கல் அடுத்த முத்தழகுபட்டியை சேர்ந்தவர் அருளானந்தபாபு (29). இவர் இறைச்சி விற்பணை செய்யும் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஆர்.வி.நகர் அருகே உள்ள கன்னிமார் தேவதைகள் தெருவில் வைத்து வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
இது தொடர்பாக திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் முன் பகை காரணமாக அருளானந்த பாபு வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு கொலை சம்பவங்கள் அதுவும் பட்ட பகலில் ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: குழந்தையுடன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்.. 8 மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்பு..