ETV Bharat / state

கள்ளக்காதல் விவகாரத்தில் மதுவில் விஷம் கலந்து கொலை.. பழனியில் இருவர் கைது! - dindigul district news

பழனி அருகே மதுவில் விஷம் வைத்து கொலை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்

பழனி அருகே மதுவில் விஷம் வைத்து கொலை செய்த இருவர் கைது

author img

By

Published : Feb 15, 2023, 11:35 AM IST

திண்டுக்கல்: பழனியை அடுத்த பூலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (39). கடந்த 3ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகப் பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுரேஷ் தற்கொலை செய்து கொண்டது குறித்து கீரனூர் காவல் நிலையத்தில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் போலீஸார் விசாரணையில் மரணடமடைந்த சுரேஷ், பூலம்பட்டியை சார்ந்த கணவனை இழந்த உறவினர் பெண் மகேஸ்வரி (44) என்பவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து சுரேஷ் உடனான தொடர்பைத் துண்டிக்குமாறு மகேஸ்வரியின் தம்பியான கருப்புசாமி (36) என்பவர் கண்டித்து வந்துள்ளார். இதனை சுரேஷும், மகேஸ்வரியும் கேட்காமல் தொடர்பு வைத்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி சுரேஷ் தனது நண்பர் பூலாம்பட்டியைச் சேர்ந்த மணிமாறன்(25) என்பவருடன் மது அருந்த சென்றுள்ளார். மது அருந்திய பின் வாந்தி எடுத்து மயக்கமடைந்த நிலையில் சுரேஷை, பழனி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

சுரேஷின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் மதுவில் விஷம் கலந்து குடித்து இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷுடன் வாழ்ந்து வந்த மகேஸ்வரி, சுரேஷின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கீரனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் சுரேஷ் உடன் தொடர்பை கைவிட மறுத்த மகேஸ்வரியின் மீது ஆத்திரம் கொண்ட அவரது சகோதரர் கருப்புசாமி சுரேஷை கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது.

இதன்படி சுரேஷின் நண்பரான மணிமாறனை வைத்து கருப்புசாமி மது பாட்டிலில் விஷம் கலந்து சுரேஷுக்கு கொடுத்ததும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் மகேஸ்வரியின் சகோதரர் கருப்புசாமி மற்றும் நண்பர் மணிமாறன் ஆகியயோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மனைவியின் படுக்கையறை வீடியோவை நண்பர்களுக்கு பகிர்ந்த கொடூர கணவன் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.