ETV Bharat / state

எம்.எல்.ஏ. காலில் திடீரென விழுந்த பெண்கள்... என்ன காரணம் தெரியுமா? - பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்

பழனி அடிவாரம் பகுதிகளில் சாலையோர கடைகள் அகற்றப்பட்டதால் தங்களின் வாழ்வாரம் பாதிக்கப்படுவதால் அதனை மீட்க்க வேண்டி பழனி சட்டமன்ற உறுப்பினரிடம் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

Etv Bஎம்.எல்.ஏ காலில் விழுந்து கோரிக்கை விடுத்த பெண் வியாபாரிகளால் பரபரப்பு!
எம்.எல்.ஏ காலில் விழுந்து கோரிக்கை விடுத்த பெண் வியாபாரிகளால் பரபரப்பு!
author img

By

Published : Aug 13, 2023, 7:20 PM IST

எம்.எல்.ஏ காலில் விழுந்து கோரிக்கை விடுத்த பெண் வியாபாரிகளால் பரபரப்பு!

திண்டுக்கல்: பழனி அடிவாரம் பகுதிகளில் சாலையோர கடைகள் அகற்றப்பட்டால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி பழனி சட்டமன்ற உறுப்பினர் காலில் விழுந்து கோரிக்கை விடுத்த பெண் வியாபாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக உள்ளது பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இந்த கோயிலுக்கு சாதாரண நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருவது வழக்கம்.

குறிப்பாக தமிழ் மாதங்களான கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய மாதங்களில் இந்த கோயிலில் திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த ஆறு மாத கால திருவிழாக்களுக்கு வரும் பக்தர்களை நம்பி 500க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சாலையோர கடைகளை அமைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இந்த திருவிழா மாதங்களை தவிர மற்ற ஆறு மாதங்களுக்கு பக்தர்கள் இல்லாமல் கோயில் வெறிச்சோடி காணப்படும். இதனால், திருவிழா காலங்களில் வரும் பக்தர்களை நம்பியும், அப்போது சம்பாதித்த தொகையை வைத்தே அடுத்த ஆறு மாதங்களுக்கு சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

இதையும் படிங்க: 70 அடி பள்ளத்தில் சிக்கிய தொழிலாளியை மீட்க போராட்டம்... டெல்லி - கத்ரா விரைவுச் சாலை பணியில் விபரீதம்!

இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக சாலையோர கடைகளை காவல்துறையும், கோயில் நிர்வாகமும் அகற்றி வருவதாக கூறப்படுகிறது. சீசன் இல்லாத காலமான ஆடி மாதத்தில் கூட பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது எனக் கூறி கடைகளை அகற்றி வருவதாக சாலையோர வியாபாரிகள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக இன்று (ஆகஸ்ட். 13) பழனி முருகன் கோயில் சிலை பாதுகாப்பு குழு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி செந்தில் குமாரிடம் சாலையோர வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். அப்போது கூட்டத்தில் சில பெண்கள் எம்.எல்.ஏ.வின் காலில் விழுந்து தங்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதற்கு வியாபாரிகளை பார்த்து பதிலளித்த எம்.எல்.ஏ. உடனடியாக அதிகாரிகளிடம் பேசுவதாவும், பக்தர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கடைகளை அமைத்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்து சென்றார். சாலையோர கடைகள் அகற்றாமல் இருக்க நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள், எம்.எல்.ஏ.வின் காலில் விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: எங்க ஊரூ மெட்ராஸு.. சென்னை தினத்தின் கொண்டாட்டம் எப்படி இருக்கப் போகிறது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.