திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக இருந்துவருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் மலை சாலையில் சுமார் 30 கிமீ தொலைவில் மயிலாடும்பாறை சுற்றுலா பகுதி அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த இடம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த இடம் வனத்துறையின் மூலம் மூடப்பட்டது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக சுவர்களில் பல்வேறு வண்ணங்களில் வனவிலங்குகளின் படங்கள் பார்த்து ரசித்தும் செல்வர். அடர்ந்த வனப்பகுதி என்பதாலும் கண்ணை வியக்கும் அளவில் அமைந்துள்ள மரங்களுடன் புகைப்படங்கள் எடுத்தும் இயற்கை அழகை ரசித்தும் செல்வர். ஆனால் இங்கு அமைந்துள்ள கண்காணிப்பு கோபுரம் சேதமடைந்தும், மேலே சென்று பார்க்க முடியாத நிலையும் உள்ளது.
மேலும், அப்பகுதி முழுவதும் சுற்றுலாப் பயணிகள் சென்று காண முடியாமல் புதர்கள் மண்டியும், நிழற்குடைகள் சேதமடைந்தும் காணப்படுகிறது. மயிலாடும்பாறை சுற்றுலா பகுதியை பராமரித்து பாதுகாப்பு அம்சங்கள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமெனவும் மீண்டும் சுற்றுலா பயணிகள் காண அனுமதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க...ஜெ. பிறந்த நாளான பிப்.24இல் அதிமுகவில் விருப்பமனு விநியோகம்!