ETV Bharat / state

பொங்கல் விடுமுறை கொண்டாட கொடைக்கானலில் குவியும் கூட்டம்

author img

By

Published : Jan 16, 2023, 11:33 AM IST

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக இன்று (ஜன.16) கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

Etv Bharatபொங்கல் விடுமுறையால் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பொங்கல் விடுமுறையால் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

திண்டுக்கல்: மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் பகல் நேரங்களில் கடுமையான வெயிலும், இரவு நேரங்களில் கடுமையான குளிரும் நிலை வருகிறது. பொங்கல் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்துள்ளனர்.

குறிப்பாக, முக்கிய சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், குணா குகை உள்ளிட்ட பகுதிகளிலும் மன்னவனூர் ஏரி, பூம்பாறை உள்ளிட்ட கிராம பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் குவிந்து காணப்படுகின்றனர். இதனால் சுற்றுலா தளங்களுக்கு செல்லக்கூடிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானலில் குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் இங்கு நிலவும் குளிர் மற்றும் இதமான காலநிலையை அனுபவித்து தங்களுடைய விடுமுறையை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றி வருகிறார்கள். வனப்பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா இடங்களில் ஒரே நுழைவு கட்டணம் என்ற முறையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஆந்திராவில் அனல் பறக்கும் சேவல் சண்டை.! கோடிக் கணக்கில் பந்தய தொகை.?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.