ETV Bharat / state

பழனியில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் திடீர் போராட்டம் - அவதியில் பக்தர்கள்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

author img

By

Published : Jan 2, 2023, 8:35 PM IST

மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் திடீர் போராட்டம்
மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் திடீர் போராட்டம்
பழனியில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் திடீர் போராட்டம் - அவதியில் பக்தர்கள்

திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய வருகை தருவர். இவ்வாறு வரும் பக்தர்கள் முருகனுக்கு முடிக்காணிக்கை செலுத்துவது வழக்கம்.

பக்தர்களின் வசதிக்காக பழனி அடிவாரம், சரவணப்பொய்கை, சண்முகா நதி, தேவர் சிலை உள்பட 8 இடங்களில் முடிக்காணிக்கை செலுத்துவதற்காக மண்டபங்கள் செயல்படுகின்றன. இங்கு 300-க்கும் மேற்பட்ட மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

இவர்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகையாக 5 ஆயிரம் ரூபாயும், கூடுதலாக ஒரு மொட்டைக்கு 30 ரூபாய் வீதம் மாதம் சராசரியாக 13ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இது திருவிழாக் காலங்களில் இன்னும் கூடுதலாக ஊதியம் கிடைக்கும் என்று கோயில் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பழனியில் உள்ள மொட்டை அடிக்கும் நிலையங்களில் பணிபுரியும் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் முடிக்காணிக்கை செலுத்துவதற்காக மொட்டை அடிக்க வந்த பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானர்.

இதுகுறித்து ஊழியர்கள் கூறுகையில், 'முடி எடுக்கும் தொழிலாளர்களுக்கு பழனி கோயில் நிர்வாகம் வழங்கும் ஊதியம் போதவில்லை. சிறுசிறு தவறு நடந்தால் கூட பணியிடை நீக்கம் செய்வதால் தங்கள் குடும்பம் பாதிக்கப்படுகிறது. கண்காணிப்பாளர் வருகையின்போது பணியில் இல்லாத ஊழியர்களுக்கு வருகைப் பதிவேட்டில் வரவில்லை என எடுத்துக் கொள்கின்றனர்’ என்றனர்.

இன்று முடிக்கொட்டகை கண்காணிப்பாளர் அர்ஜுனன் வருகை பதிவேட்டை பார்த்துவிட்டு, கையெழுத்து போட்டுவிட்டு பணிக்கு வராத ஊழியர்களின் வருகையை ரத்து செய்ய அறிவுறுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த மொட்டை அடிக்கும் பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

இதுதொடர்பாக பழனி கோயில் அதிகாரிகளிடம் கேட்டபோது, “மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் பெரும்பாலும் கையெழுத்து போட்டுவிட்டு வெளிவேலைகளுக்கு சென்றுவிடுகின்றனர். இதனால் பணிக்கு வராத தொழிலாளர்களுக்கும் சம்பளம் வழங்கும் நிலை ஏற்படுகிறது.

சரியாக மாதம் ஒன்றுக்கு நாற்பது லட்சம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில், கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு பணிக்கு வராமல் இருக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அதை செய்யக்கூடாது என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒட்டன்சத்திரம் அருகே உள்ள குழந்தை வேலப்பர் கோயிலில் பக்தர்களுக்கு மொட்டை அடிக்க செல்லுமாறு பணியாளர்களிடம் தெரிவித்தால், அங்கு யாரும் செல்வதில்லை” என்று தெரிவித்தனர்.

திருக்கோயில் நிர்வாகத்திற்கும் மொட்டை அடிக்கும் பணியாளர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின் பொழுது மொட்டை அடிக்க வந்த பக்தர்கள் அதிருப்தி அடைந்து அருகில் உள்ள தனியார் கடைகளில் மொட்டை அடிக்க செல்வதாக கூறி சென்று விட்டனர்.

இதையும் படிங்க: ஈஷாவில் இளம்பெண் மரணம்! குழு அமைத்து விசாரிக்க கோரி ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.