ETV Bharat / state

"இந்தியாவிற்கு அதிபர் தேர்தல்முறை அறிவிக்கப்படலாம் - கார்த்தி சிதம்பரம் - திண்டுக்கல்

திண்டுக்கல்:  இந்தியாவிற்கு அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் கார்த்திக் சிதம்பரம் அளித்த பேட்டி
author img

By

Published : Aug 13, 2019, 6:18 PM IST

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலுக்கு சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தரிசனம் செய்ய வந்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், பாஜகவிற்கு பல மாநில கட்சிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவை அளித்து வருகிறது. இதனால், பாஜக தன்னிச்சையாக எந்தவொரு முடிவையும் எடுக்கிறது. இவர்களின் சர்வாதிகாரப் போக்கை கண்டிக்கும், ஒரே கட்சியாக காங்கிரஸ் மட்டுமே இருந்து வருகிறது.

செய்தியாளர்களை சந்திக்கும் கார்த்தி சிதம்பரம்
மோடியின் சர்வாதிகாரத்திற்கான எடுத்துக்காட்டு தான் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. பாண்டிச்சேரி, டெல்லி போன்ற யூனியன் பிரதேசங்கள் தங்களை மாநிலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், முழு மாநிலமாகவே செயல்பட்டு வந்த காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டிருப்பது பெரும் தவறு.
மோடி தனது அடுத்தடுத்த நடவடிக்கைகளில் அதிகாரத்தை ஒற்றை புள்ளிக்கு கீழே வரும் வகையில் கட்டமைக்கிறார். இதனால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் முழு அதிகாரமும் செல்லும் நிலை ஏற்பட்டு மாநில அரசுகளின் உரிமை பறிக்கப்படும். இனி வரும் காலங்களில் பாஜக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றி, அதிபர் தேர்தல் முறையை நடைமுறை செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்றார்.

Intro:திண்டுக்கல் 13.8.19

விரைவில் இந்தியாவிற்கு அதிபர் தேர்தல் முறை அறிவிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை : கார்த்திக் சிதம்பரம்

Body:திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு வேண்டுதலை செலுத்துவதற்காக சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் வந்திருந்தார். அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம் அவர்கள், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பாஜகவிற்கு பல மாநில கட்சிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்களது ஆதரவை அளித்து வருகின்றனர்.

இதன் காரணமாக பாஜக தன்னிச்சையாக எந்தவொரு முடிவையும் எடுத்து வருகிறது. இது நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்கும் செயலாகும். குறிப்பாக எந்த தீர்மானத்தை வேண்டுமானாலும் எந்நேரத்திலும் நிறைவேற்றும் பெரும்பான்மை அவர்களிடம் உள்ளது. அதன் காரணமாக சர்வாதிகாரப் போக்குடன் மோடி செயல்படுகின்றார். இவர்களின் இந்த சர்வாதிகாரப் போக்கை கண்டிக்கும் ஒரே கட்சியாக காங்கிரஸ் மட்டுமே இருந்து வருகிறது.

மோடியின் சர்வாதிகாரத்திற்கான எடுத்துக்காட்டு தான் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. சுதந்திர இந்தியாவில் இப்படி ஒரு செயலை யாரும் செய்ததில்லை. பாண்டிச்சேரி, டெல்லி போன்ற யூனியன் பிரதேசங்கள் தங்களை மாநிலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் முழு மாநிலமாகவே செயல்பட்டு வந்த காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டிருப்பது பெரும் தவறு.

மோடி தனது அடுத்தடுத்த நடவடிக்கைகளில் அதிகாரத்தை ஒற்றை புள்ளிக்கு கீழே வரும் வகையில் கட்டமைக்கிறார். இதனால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் முழு அதிகாரமும் செல்லும் நிலை ஏற்பட்டு மாநில அரசுகளின் உரிமை பறிக்கப்படும். இதுமட்டுமன்றி வரும் காலங்களில் பாஜக தனது தனிப் பெரும்பான்மையை பயன்படுத்தி இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றி அதிபர் தேர்தல் முறையை நடைமுறை செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்று கூறினார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.