ETV Bharat / state

பாஜக ஆட்சியில் ஊடகங்களுக்கு சுதந்திரம் இல்லை - எம்.பி ஜோதிமணி - twitter

பாஜக ஆட்சியில் ஊடகங்களுக்கு சுதந்திரம் இல்லை என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி குற்றச்சாட்டியுள்ளார்.

பாஜக ஆட்சியில் ஊடகங்களுக்கு சுதந்திரம் இல்லை

author img

By

Published : Jul 31, 2022, 9:19 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டியில் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கலந்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ஜோதிமணி பேசுகையில், “பிரஸ் ஃப்ரீடம் இன்டெக்ஸ் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பில் உலக நாடுகள் தரவரிசை பட்டியலில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. அந்த அளவிற்கு மோசமாக ஊடகங்களுக்கு சுதந்திரம் இல்ல சூழ்நிலை இங்கு நிலவுகிறது.

தனிப்பட்ட முறையில் ஊடகவியாளர்களால் போடப்படும் ட்வீட்கள் நீக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் செய்தித் துறையில் போடப்படும் ட்வீட்டுகளே நீக்கப்படும் நிலையில், உள்ளது.

இந்த அரசு எவ்வளவு தூரம் ஊடகங்களை ஒடுக்குகிறதோ அவ்வளவு வெளிப்படை தன்மை இல்லாமல் இருக்கிறது. தமிழ்நாடு மற்றும் தேசிய அளவில் இருக்கும் ஊடகவியலாளர்கள் உண்மையை மக்களிடம் கூற வேண்டும். அப்பொழுதுதான் கருத்து சுதந்திரம் உள்ள ஜனநாயக நாடாக இந்தியாவை நடத்த முடியும். இல்லையெனில் ஊடகம் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆர்எஸ்எஸ் போல மாறிவிடும் ஆபத்து ஏற்படும். இந்த ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட வேண்டும். இதற்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் - வி.கே.சசிகலா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.