ETV Bharat / state

பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு ஓர் நற்செய்தி! - Sabarimala season

பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்கவும், குளிருக்கு இதமாகவும் சுக்கு காபி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஓர் நற்செய்தி

author img

By

Published : Dec 1, 2022, 6:46 AM IST

திண்டுக்கல்: உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய செல்கின்றனர். தற்போது சபரிமலை சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் பழனிக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

அவ்வாறு செல்லும் பக்தர்கள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு படிப்பாதை, யானைப்பாதை மற்றும் ரோப்கார், மின்இழுவை ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு செல்கின்றனர். இதில் பெரும்பாலானோர் படிப்பாதை வழியே தான் சென்று வருகின்றனர். பழனியில் கடந்த சில நாட்களாக இரவு, அதிகாலையில் கடும் குளிர் நிலவி வருகிறது.

இந்நிலையில் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்கவும், குளிருக்கு இதமாகவும் சுக்கு காபி வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது படிப்பாதை வழியே செல்லும் பக்தர்களுக்கு இடும்பர் சன்னதி அருகில் சுக்கு காபி வழங்கப்படுகிறது.

பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஓர் நற்செய்தி

மேலும் பக்தர் ஒருவருக்கு தலா 100 மிலி வீதம் வழங்கப்படுகிறது. இதை பக்தர்கள் ஆனந்தமுடன் வாங்கி பருகி செல்கின்றனர். இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது வரவேற்கக் கூடியது எனவும் அதற்காக பக்தர்கள் தங்களது நன்றிகளையும் தெரிவித்தனர்.

இதுகுறித்து கோவில் அதிகாரிகளிடம் கேட்டபோது, காலையிலயே குளித்துவிட்டு பசியோடு பக்தர்கள் வருவர். எனவே அவர்களுக்கு மிகுந்த களைப்பு இருக்கும். அதனால் தற்போது சுக்கு காபி வழங்கப்படுகிறது. தினமும் சுமார் 5000 முதல் 10000 பக்தர்களுக்கு சுக்கு காபி வழங்கப்பட்டு வருகிறது என்றனர்.

இதையும் படிங்க: கொடைக்கானல் 60-வது மலர் கண்காட்சி.. வண்ணமயமாக தயாராகும் பிரையண்ட் பூங்கா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.