திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே சுமார் 30 கிமீ தொலைவில் சின்னூர் மற்றும் பெரியூர் ஆகிய மலைக் கிராமங்கள் அமைந்துள்ளன. இந்தக் கிராமங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இங்கு விறுவிறுப்பாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. கொடைக்கானலில் நேற்றிரவு 7 மணி நிலவரப்படி 73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் மலைக் கிராமங்களான சின்னூர் மற்றும் பெரியூர் ஆகிய கிராமங்களில் இருந்து வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் இன்று (ஏப்.7) பெரியகுளம் சாலை வரை வனப்பகுதிக்குள் குதிரைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வாகனத்தில் வாக்கு மையத்திற்கு அனுப்பப்பட்டன.
மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்கும் பணியில், துப்பாக்கி ஏந்திய காவலர்கள் மற்றும் நக்சல் தடுப்பு காவலர்கள் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: சித்தோர்கர் ரயில் நிலையத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஓவியக் கதைகள்!