ETV Bharat / state

விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்ட பதப்படுத்தும் நிலையம் தனியாருக்கு குத்தகை; திமுக நிர்வாகி ஆவேசம்!

விவசாயிகளுக்காக திறக்கப்பட்ட காய்கரிகள், பழங்களை பதப்படுத்தும் நிலையத்தை, தனியார் நூற்பாலைக்கு வாடகைக்கு விட்ட சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக நிர்வாகி தெரிவித்துள்ளார்.

பழங்கள் பதப்படுத்தும் நிலையம்: தனியாருக்கு குத்தகை: திமுக நிர்வாகி ஆவேசம் !

author img

By

Published : Jul 4, 2023, 11:06 PM IST

பழங்கள் பதப்படுத்தும் நிலையம்: தனியாருக்கு குத்தகை: திமுக நிர்வாகி ஆவேசம் !

திண்டுக்கல்: அதிமுக ஆட்சி காலகட்டத்தில் இரண்டரை கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட காய் பழங்கள் பதப்படுத்தும் நிலையத்தை தனியார் நூற்பாலைக்கு வாடகைக்கு விட்ட அரசு அதிகாரிகளால் பொங்கி எழுந்துள்ளார் திமுக ஒன்றிய பொருளாளர் மாசி. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சேனன்கோட்டையில், முருங்கைக்காய் விவசாயிகள் மற்றும் காய் பழங்கள் பயிரிடும் விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இரண்டரை கோடி ரூபாய் செலவில் காய் பழங்கள் பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட்டது.

கடந்த அதிமுக ஆட்சி காலகட்டத்தில் அப்போது இருந்த வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.பி.பி. பரமசிவம் முயற்சியால் இது அமைக்கப்பட்டது. இந்த நிலையம் அதிமுக ஆட்சியில் ஒரு சில தொழில்நுட்ப கருவிகள் வராத காரணத்தால் திறப்பு விழா நடைபெறவில்லை. அதன் பிறகு திமுக ஆட்சி வந்தவுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இந்த நிலையத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் காந்திராஜன் அப்போதைய மாவட்ட ஆட்சியர் விசாகன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும், திமுக முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: வன விலங்குகளைப் பாதுகாக்க மின்வேலிகள் அமைக்க புதிய கட்டுப்பாடுகள் - தமிழ்நாடு அரசாணை வெளியீடு

இந்த நிலையம் திறக்கப்பட்டதை அடுத்து அனைத்து விவசாயிகளும் தங்கள் விலை பொருட்களை விலை குறைவான நேரத்தில் பாதுகாப்புடன் வைத்திருந்து நல்ல விலை கிடைக்கும் பொழுது விற்கலாம் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் இப்போது அந்த கட்டடத்தை அரசு அதிகாரிகளும் வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினரும் விவசாயத்திற்கு சம்பந்தமே இல்லாத தனியார் நூற்பாலைக்கு வாடகைக்கு விட்டுள்ளது ஏமாற்றத்தை அளித்துள்ளது. நூற்பாலை நிர்வாகத்தினர் தங்கள் ஆலையில் வீணாகும் கழிவு பொருட்களை தேக்கி வைக்கும் குடோனாக பயன்படுத்த தொடங்கினர்.

இதனைப் பார்த்த நாகம்பட்டி திமுக ஒன்றிய பெண் கவுன்சிலரின் கணவரும் திமுக தெற்கு ஒன்றிய பொருளாளருன மாசி , “இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கான பயனுள்ள நிலையத்தை முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார், அனைத்து விவசாயிகளும் பயனடையலாம் என்றும் ஏராளமான விவசாய பணியாளர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் மார்தட்டிக் கொண்டிருந்தோம்.

ஆனால் அரசு அதிகாரிகளும் வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினரும் தங்கள் சுயநலத்திற்காக விவசாயத்திற்கே சம்மந்தம் இல்லாத நூற்பாலை நிர்வாகத்திற்கு குடோனிற்காக வாடகைக்கு விட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரூ.21 லட்ச பேட்டரி கார்.. 3 முறை நடுரோட்டில் நின்ற அவலம்.. டென்ஷனான ஓனர் தர்ணா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.