ETV Bharat / state

‘என் தற்கொலைக்கு தனியார் வங்கி தான் காரணம்’ - வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்ட வியாபாரி தற்கொலை

author img

By

Published : Jun 3, 2022, 6:33 PM IST

Updated : Jun 3, 2022, 7:45 PM IST

நிலக்கோட்டை அருகே கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ஜவுளி வியாபாரி தனியார் வங்கிகளின் மீது நடவடிக்கை எடுக்க கோரி உருக்கமான வாக்குமூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜவுளி வியாபாரி தற்கொலை
ஜவுளி வியாபாரி தற்கொலை

திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகேவுள்ள குண்டலபட்டியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (46). இவரது மனைவி அழகேஸ்வரி. இவர்களுக்கு இடண்டு குழந்தைகள் உள்ளனர். லட்சுமணன் வீடு வீடாகச் சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கிகள் வீடு கட்டுவதற்கு குறைந்த வட்டியில் கடன் கொடுப்பதாக அறிவிந்திருந்தது. அறிவிப்பின் அடிப்படையில் லட்சுமணன் தனியார் வங்கியில் கடன் வாங்கியுள்ளார். கடன் வாங்கியபோது 82 பைசா வட்டி என்று கூறியதாகவும், பின்னர் கூடுதலாக வட்டி கேட்டதாகவும், கூறப்படுகிறது.

இந்த கடன் விவகாரம் தொடர்பாக தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 01) அழகேஸ்வரி கோவித்துக் கொண்டு தேனி மாவட்டம், ஆண்டிபட்டியிலுள்ள தனது அக்கா வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதனால் வேதனையடைந்த லட்சுமணன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது செல்போனில் ஒரு உரையாடலை பதிவுசெய்து வாட்ஸ் அப்பில் அனைவருக்குன் அனுப்பி விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அந்த உரையாடலில் அவர் கூறியது, “என் மரணத்திற்கு காரணம் தனியார் வங்கிகள். என்னை நம்பிய 5 நபர்களுக்கு கடன் வாங்கி தந்து அவர்களையும் தர்மசங்கடத்தில் தலைகுனிய வைக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். இந்த 5 பேரும் என்னை மன்னிக்கவும், தனியார் வங்கிகள் 6 லட்சத்து 87 ரூபாய் கடன் கொடுத்து 80 பைசா வட்டி என்று கூறினார்கள். ஆனால், தற்போது கூடுதலாக வட்டி வாங்கி வருகிறார்கள். அதை கடந்த 3 வருட காலமாக கரோனா தொற்று காலத்தில் கூட சரியாக கட்டி வந்தேன்.

ஜவுளி வியாபாரி தற்கொலை

தற்போது நூல் விலை மற்றும் ஜவுளி விலைகள் கூடியதால் விலை உயர்வு காரணமாக 10 பேர் வேலை செய்த இடத்தில் 2 பேர் மட்டுமே வேலை செய்யக்கூடிய அளவுக்கு தொழிலில் நஷ்டம் அடைந்துள்ளது. என் சாவுக்கு முழு காரணம் தனியார் வங்கியின் இடைத்தரகராக செயல்பட்டவரும், அந்த வங்கிகளும் தான் பொறுப்பு எனது பக்கம் நியாயம் கிடைக்க எனக்கு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்” என மிகவும் உருக்கமாகப் பேசியுள்ளார்.

இதனைப் பார்த்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக நிலக்கோட்டை காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், வீட்டின் கதவை உடைத்து லட்சுமணின் உடலை மீட்டனர். தொடர்ந்து உடற்கூராய்வுக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல
தற்கொலை எதற்கும் தீர்வல்ல

இதையும் படிங்க: மதுபோதையில் தாயிடம் பணம் கேட்ட அண்ணன்: அடித்துக் கொலை செய்த தம்பி!

Last Updated : Jun 3, 2022, 7:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.