ETV Bharat / state

ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கிய துபாய் வாழ் தமிழர்கள்! - கொரோனா தொற்று

பழனி அரசு மருத்துவமனைக்கு நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை துபாய் வாழ் தமிழர்கள் வழங்கினர்.

துபாய் வாழ் தமிழர்கள்
துபாய் வாழ் தமிழர்கள்
author img

By

Published : Jun 9, 2021, 11:30 PM IST

திண்டுக்கல்: பழனி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். நாள்தோறும் முப்பதுக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகளுக்குத் தட்டுப்பாடின்றி ஆக்சிஜன் கிடைக்கும் வகையில் தன்னார்வலர்கள் சிலர் ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை வழங்கிவருகின்றனர்.

இந்நிலையில், துபாய் வாழ் தமிழர்கள் நலச் சங்கம் சார்பில் பழனி அரசு மருத்துவமனைக்கு நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

துபாயில் வசித்துவரும் தமிழர்கள் உதவியுடன் பழனியைச் சேர்ந்த நரசிம்ம ராஜா, விஜயகுமார் ஆகியோர் இந்த ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை பழனி அரசு மருத்துவமனைக்கு வழங்கினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.